முகப்பு
தமிழ்நாடு

திருவாரூரில் நேரு பிறந்தநாள் கொண்டாட்டம்

திருவாரூரில் ஜவாஹர்லால் நேருவின்  131-வது பிறந்தநாள் விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:52 PM
திருவாரூரில் நேரு பிறந்தநாள் கொண்டாட்டம்
பகிர்:

திருவாரூர்: திருவாரூரில் ஜவாஹர்லால் நேருவின்  131-வது பிறந்தநாள் விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு காந்தியன் அறக்கட்டளைத் தலைவர் தெ.சக்திசெல்வகணபதி தலைமை வகித்தார்.

கலை இலக்கிய பெருமன்றத் தலைவர் வீ தர்மதாஸ்,வங்கி கூட்டமைப்புகளின் தலைவர் என்.காளிமுத்து திருவாரூர்த் தமிழ்ச் சங்க செயலாளர் ஆரூர்அறிவு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் முத்தமிழ்ப் பண்பாட்டு பாசறைத் தலைவர் ஆரூர் சீனிவாசன் பங்கேற்று ஜவாஹர்லால் நேருவின் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

நிகழ்வில்  தொழிற்ச்சங்க கூட்டமைப்புச் செயலர் பாலதண்டாயுதம், கலை இலக்கிய பெருமன்ற பொறுப்பாளர் கூடூர்குணா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.