சங்ககிரி: மலைக்கோட்டை முனியப்ப சுவாமிக்கு சிறப்பு பூஜை
சேலம் மாவட்டம், சங்ககிரி மலையில் காவல் தெய்வமான அருள்மிகு கோட்டை முனியப்பன் சுவாமிக்கு அமாவாசையொட்டி சனிக்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன
சங்ககிரி: சேலம் மாவட்டம், சங்ககிரி மலையில் 2வது மண்டபத்தையடுத்து இடது புறம் உள்ள காவல் தெய்வமான அருள்மிகு கோட்டை முனியப்பன் சுவாமிக்கு அமாவாசையொட்டி சனிக்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
சங்ககிரி மலையில் 2வது மண்டபத்தையொட்டி இடது புறம் திரும்பி தென்மேற்கு திசையில் பாறையின் உள்பகுதியில் அக்காலத்தில் அரசர்களால் வணங்கி வந்த காவல் தெய்வமான அருள்மிகு கோட்டை முனியப்பன் சுவாமி கிழக்கு நோக்கி அமைந்துள்ளது.
தீபாவளி அமாவாசையையொட்டி அருள்மிகு முனியப்பன், சப்த கன்னியர், கருப்பனார் ஆகிய சுவாமிகளுக்கு பால், தயிர், சந்தனம், பன்னீர், இளநீர் உள்ளிட்ட பல்வேறு திவ்ய பொருள்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. அதிகமான பக்தர்கள் குடும்பத்துடன் சென்று சுவாமிகளை வழிபட்டுச் சென்றனர்.