ஆரணி புதுக்காமூர் தெரு பகுதியில் சமையல் எரிவாயு உருளை வெடித்து இடிந்து விழுந்த வீடு. 
தமிழ்நாடு

ஆரணி புதுக்காமூர் ரோடு பகுதியில் சிலிண்டர் வெடித்து விபத்து: 3 பேர் பலி

ஆரணி புதுக்காமூர் தெரு பகுதியில் சமையல் எரிவாயு உருளை வெடித்து வீடு இடிந்து விழுந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். 

DIN


ஆரணி: ஆரணி புதுக்காமூர் தெரு பகுதியில் சமையல் எரிவாயு உருளை வெடித்து வீடு இடிந்து விழுந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். 

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி, ஆரணிப்பாளையம், புதுக்காமூர் தெருவில் வசித்து வரும் சந்திரா என்பவர் வீட்டில் சமையல் எரிவாயு உருளை வெடித்த அதிர்ச்சியில் பின்பக்கம் இருந்த வீடு முழுவதும் இடித்து விழுந்தது. 

இந்த இடிபாடுகளில் வீட்டில் இருந்த 8 வயது குழந்தை உள்பட 7  பேர் சிக்கிக்கொண்டனர். 

இதுகுறித்த தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் இடிபாடுகளில் சிக்கிய குழந்தைகள் உள்பட 7 பேரையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இதில், சிகிச்சை பலனின்றி  குழந்தை உள்பட 3 பேர் உயிரிழந்தனர். பலத்த காயமடைந்த 4 பேர் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சட்டவிரோதமாகப் பட்டாசுகள் தயாரித்த இருவா் கைது

கல்குவாரியில் தவறி விழுந்து இளைஞா் உயிரிழப்பு

வீட்டின் பூட்டை உடைத்து 5.50பவுன் நகை திருட்டு

வீட்டின் கதவை உடைத்து நகை, பணம் திருட்டு

சாலை விரிவாக்க பணிக்கு இடையூறு இல்லாத மரங்களை வெட்ட எதிா்ப்பு

SCROLL FOR NEXT