முகப்பு
தமிழ்நாடு

செஞ்சி: சொத்துத் தகராறில் தாயைக் கொலை செய்த மகன் கைது

செஞ்சி அருகே சொத்துத் தகராறில் தாயை அடித்து கொலை செய்த மகனை காவல்துறையினர் கைது செய்தனர்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:52 PM
செஞ்சி: சொத்துத் தகராறில் தாயைக் கொலை செய்த மகன் கைது (கோப்புப்படம்)
பகிர்:

விழுப்புரம்: செஞ்சி அருகே சொத்துத் தகராறில் தாயை அடித்து கொலை செய்த மகனை காவல்துறையினர் கைது செய்தனர்.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே அவலூர்பேட்டையைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன் 72. இவரது மனைவி ஜக்குபாய் 65.  இவர்களுக்கு அயோத்தி (36) உள்பட இரு பிள்ளைகள் உள்ளனர்.

ராமச்சந்திரன் அண்மையில் சொத்துக்களைப் பிரித்து, இரு பிள்ளைகளுக்கும் ஒப்படைத்துள்ளார். இதில் இளைய மகன் அயோத்திக்கு வழங்கப்பட்ட சொத்தின் மதிப்பு குறைவாக இருந்ததால் அதனைக் கேட்டு தகராறு செய்து வந்துள்ளார்.

இந்த நிலையில் தீபாவளியன்று சனிக்கிழமை இரவு மது போதையில் தகராறு செய்த அயோத்தி, தனது தாய் ஜக்குபாயை அடித்துக் கொலை செய்தார்.

இது குறித்த புகாரின் பேரில் அவலூர்பேட்டை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து அயோத்தியை கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.