கடல் சீற்றம்: வேதாரண்யத்தில் 5-வது நாளாக மீன்பிடித்தொழில் பாதிப்பு
வேதாரண்யம், கோடியக்கரை பகுதிகளில் காற்று சுழற்சி காரணமாக கடல் சீற்றமாகக் காணப்படுவதால் மீனவர்கள் 5-ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமை கடலுக்குள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
வேதாரண்யம்: நாகை மாவட்டம், வேதாரண்யம், கோடியக்கரை பகுதிகளில் காற்று சுழற்சி காரணமாக கடல் சீற்றமாகக் காணப்படுவதால் மீனவர்கள் 5-ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமை கடலுக்குள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
இலங்கைக்கு அருகே நிலை கொண்ட காற்றுச் சுழற்சியின் காரணமாக வேதாரண்யம் பகுதி கடல் பரப்பு இயல்புக்கு மாறாக சீற்றமாகக் காணப்படுகிறது.
இந்த நிலைையில், மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என மீன் வளத்துறை அறிவித்துள்ளது. இதையடுத்து, புதன்கிழமை முதல் மீனவர்கள் கடலுக்குள் செல்லவில்லை.
Advertisement
ஆறுகாட்டுத்துறை, கோடியக்கரை, புஷ்பவனம், வானவன்மாதேவி, வெள்ளப்பள்ளம் உள்ளிட்ட வேதாரண்யம் பகுதிக் கடலோர கிராமங்களில் மீன்பிடித் தொழில் 5- ஆவது நாளாக முடங்கியது.
கடல் சீற்றம் காரணமாக தாழ்வான கடலோரப் பகுதிகளில் கடல் நீர் உள்புகுந்தது. இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை அவ்வப்போது மழைப் பொழிவும் காணப்பட்டது.