திருச்சி வரைவு வாக்காளர் பட்டியலில் 22.60 லட்சம் வாக்காளர்கள்
திருச்சி ஆட்சியரகத்தில் 2021- வரைவு வாக்காளர் பட்டியலை, அனைத்து அரசியல் கட்சியினர் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு வெளியிட்டார்.
தமிழ்நாடுதிருச்சி வரைவு வாக்காளர் பட்டியலில் 22.60 லட்சம் வாக்காளர்கள்
திருச்சி ஆட்சியரகத்தில் 2021- வரைவு வாக்காளர் பட்டியலை, அனைத்து அரசியல் கட்சியினர் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு வெளியிட்டார்.
திருச்சி ஆட்சியரகத்தில் 2021- வரைவு வாக்காளர் பட்டியலை, அனைத்து அரசியல் கட்சியினர் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு வெளியிட்டார்.
இதன்படி, மாவட்டத்தில் 22 லட்சத்து 60 ஆயிரத்து 439 பேர் வாக்காளர் பட்டியலில் உள்ளனர். மாவட்டத்தில் உள்ள திருவரங்கம், திருவெறும்பூர், திருச்சி கிழக்கு, திருச்சி மேற்கு, மணப்பாறை, லால்குடி, மண்ணச்சநல்லூர், முசிறி, துறையூர் ஆகிய 9 தொகுதிகளில் 22.60 லட்சம் வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர்.
ஆண் வாக்காளர்கள்- 10 லட்சத்து 99 ஆயிரத்து 997.
பெண் வாக்காளர்கள் 11 லட்சத்து 60 ஆயிரத்து 256.
திருநங்கைகள் - 206 பேர்
என மொத்த வாக்காளர்கள்- 22 லட்சத்து 60 ஆயிரத்து 439 வாக்காளர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.
புதியதாக 6 ஆயிரத்து 448 வாக்களர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். வாக்காளர் பட்டியலில் குடிபெயர்ந்தவர்கள், இறந்தவர்கள், இரண்டு இடங்களில் பெயர் உள்ளவர்கள் என 43 ஆயிரத்து 115 பேர் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.