முகப்பு
தமிழ்நாடு

தொடரும் கனமழை: பேரிடர் மேலாண்மை வெளியிட்டிருக்கும் அறிவுறுத்தல்

தமிழகத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், பொதுமக்களுக்கு தமிழக பேரிடர் மேலாண்மை அமைப்பு சில அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:53 PM
தொடரும் கனமழை: பேரிடர் மேலாண்மை வெளியிட்டிருக்கும் அறிவுறுத்தல்
பகிர்:

தமிழகத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், பொதுமக்களுக்கு தமிழக பேரிடர் மேலாண்மை அமைப்பு சில அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது.

தமிழக பேரிடர் மேலாண்மை அமைப்பின் அதிகாரப்பூர்வ சுட்டுரைப் பக்கத்தில் கூறப்பட்டிருப்பதாவது, 
பொதுமக்களுக்கு அன்பார்ந்த வேண்டுகோள்! 
 தமிழகத்தில் தொடர்ந்து பரவலாக கனமழை பெய்து வருவதால்.. கடல், ஆறு, ஏரி, குளம் மற்றும் குட்டை போன்ற நீர் நிலைகளில் குளிக்கவோ கடந்து செல்லவோ வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது.

மேலும், பழைய கட்டடங்களில் தங்குவதோ அருகில் செல்லவோ வேண்டாம். அவ்வாறு பழைய கட்டடங்களில் தங்கி இருப்பவர்கள் உடனடியாக வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

அதுபோலவே, பொதுமக்கள் யாரும் ஆற்றில் குளிக்கவோ மற்றும் கடந்து  செல்லவோ வேண்டாம் என அறிவுறுத்தப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →