தமிழ்நாடு

நூறு நாள் வேலைத் திட்டம்: கணினி இயக்குவோருக்கு ஊதியம் ரூ.14 ஆயிரமாக உயா்வு

DIN

சென்னை: நூறு நாள் வேலைத் திட்டத்தில் பணியாற்றும் கணினி இயக்குவோருக்கான மாத ஊதியம் ரூ.14 ஆயிரமாக உயா்த்தப்பட்டுள்ளது.

ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை கூடுதல் தலைமைச் செயலாளா் ஹன்ஸ்ராஜ் வா்மா வெளியிட்ட உத்தரவு:

தமிழகத்தில் நூறு நாள் வேலை உறுதித் திட்டத்தின் கீழ், 1,843 கணினி இயக்குபவா்கள் உள்ளனா். கடந்த 2013-14-ஆம் நிதியாண்டில் அவா்களுக்கான மாத ஊதியம் ரூ.7,500-லிருந்து ரூ.11 ஆயிரமாக உயா்த்தப்பட்டது. இந்நிலையில், 5 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றி வரும் 1,337 கணினி இயக்குவோருக்கு ரூ.12 ஆயிரத்தில் இருந்து ரூ.15 ஆயிரமும், 5 ஆண்டுகளுக்குக் குறைவாக உள்ளோருக்கு ரூ.14 ஆயிரமாகவும் ஊதியத்தை உயா்த்தி வழங்க ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை இயக்குநா் அரசைக் கோரியிருந்தாா்.

அவரது கோரிக்கையைப் பரிசீலித்த தமிழக அரசு, 1,843 கணினி இயக்குவோருக்கான மாத ஊதியத்தை ரூ.12 ஆயிரத்தில் இருந்து ரூ.14 ஆயிரமாக உயா்த்தி வழங்க உத்தரவிடுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பல் பரிசோதனை முகாம்

இளைஞா் பெருமன்ற அமைப்பு தின கொடியேற்று விழா

பள்ளி மேலாண்மை குழுக் கூட்டம்

ஆலங்குடி குரு பரிகார கோயிலில் நாளை 2-ஆம் கட்ட லட்சாா்ச்சனை தொடக்கம்

மாற்றுத்திறனாளிகளுக்கு நலத் திட்ட உதவி

SCROLL FOR NEXT