தமிழ்நாடு

குன்னூர் மலைப்பாதையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி புள்ளிமான் பலி

DIN


மேட்டுப்பாளையம் குன்னூர் மலைப்பாதையில் சாலையைக் கடக்க முயன்ற 2 வயது புள்ளிமான் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் படுகாயமடைந்த புள்ளிமான் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் குன்னூர் மலைப்பாதை அடர்ந்த வனப்பகுதியில் உள்ளது. இங்கு காட்டுயானை, காட்டுப்பன்றி, காட்டெருமை, சிறுத்தை, புள்ளிமான், கடமான் உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் நடமாடி வருகின்றன. மேலும் அடர்ந்த வனப்பகுதியின் நடுவே சாலை அமைந்துள்ளதால் அவ்வப்போது வனவிலங்குகள் சாலையின் அருகே நடமாடி வருவது வழக்கம். 

இந்நிலையில், மேட்டுப்பாளையம் குன்னூர் மலைப்பாதையில் இரண்டாவது கொண்டை ஊசி வளைவு  சாலையின் அருகே வனப்பகுதியில் இருந்து சாலையைக் கடக்க முயன்ற 2 வயதுடைய பெண் புள்ளிமான் மீது அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத இரு சக்கர வாகனம் மோதியது.

இதில், படுகாயமடைந்த புள்ளிமான் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தது. 

இதனை பார்த்த வாகன ஓட்டிகள் மேட்டுப்பாளையம் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் அங்குச் சென்ற வனத் துறையினா் புள்ளிமான் உடலை கைப்பற்றி அடர்ந்த வனப்பகுதியில் குழிதோண்டி புதைத்தனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காந்தாரி.. ஈஷா ரெப்பா!

ஸ்ரீரங்கம் தேரோட்டம் கோலாகலம்!

நேரத்தை மிச்சப்படுத்தும் ஏஐ : 94% பணியாளர்களின் கருத்து என்ன?

சென்னை-நாகர்கோவில் சிறப்பு ரயில் 19 மணி நேரம் தாமதமாகப் புறப்படும்!

ஆயிரம்விளக்கு அருகே பூங்காவில் சிறுமியை கடித்த வளர்ப்பு நாய்கள்

SCROLL FOR NEXT