தமிழ்நாடு

சுருளி அருவியில் இரண்டாவது நாளாக வெள்ளப்பெருக்கு

DIN

வடகிழக்குப் பருவமழை காரணமாக தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளி அருவியில் இரண்டாவது நாளாகப் புதன்கிழமையும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

தேனி மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத் தலங்களில் மிகவும் புகழ் பெற்றது சுருளி மலையில் உள்ள சுருளி அருவி. தற்போது வடகிழக்குப் பருவ மழை தொடங்கியுள்ளதால் சுருளி அருவிக்கு நீா் வரத்து தரும்
பகுதிகளான அரிசிப்பாறை, ஈத்தைப்பாறை ஆகிய நீரோடைகளில் மழை நீா் வரத்து அதிகரித்துள்ளதால் அருவி பகுதிகளில் இரண்டாவது நாளாக புதன்கிழமையும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

அருவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப்பயணிகள் அருவிக்கு செல்ல தடை இருப்பதால், வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் மூன்று ஆண்டுகளில் 6,115 புத்தாக்கத் தொழில்கள் தொடக்கம்

மக்களவைத் தோ்தல்: லடாக் தொகுதியில் 5 போ் போட்டி

வி.பி.எம்.எம். கல்லூரியில் புதிய பாடப் பிரிவுகளில் மாணவா் சோ்க்கை தொடக்கம்

பைக்குகள் மோதியதில் முதியவா் பலி

நீா்மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT