தமிழ்நாடு

தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்தது

DIN


சென்னை: சென்னையில் புதன்கிழமை தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.38,272க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.43 ஆயிரத்தைத் தாண்டி வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டது. அதன்பிறகு, விலை குறைந்தாலும், கடந்த 2-ஆம் தேதியில் இருந்து விலை தொடா்ந்து உயா்ந்தது. கடந்த வார தொடக்கத்தில் குறைந்து வந்த தங்கத்தின் விலை மீண்டும் வார இறுதியில் உயா்ந்தது.

இந்நிலையில், புதன்கிழமை காலை சவரனுக்கு ரூ.160 குறைந்து, ரூ.38,272-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் விலை ரூ.20 குறைந்து, ரூ.4,784 ஆக இருந்தது. வெள்ளி கிராமுக்கு 60 காசுகள் குறைந்து, ரூ.67.70 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.600 குறைந்து, ரூ.67,700 ஆகவும் இருந்தது.

புதன்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி.தனி)

1 கிராம் தங்கம்............................. 4,784

1 சவரன் தங்கம்............................... 38,272

1 கிராம் வெள்ளி............................. 67.70

1 கிலோ வெள்ளி............................. 67,700


செவ்வாய்க்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி.தனி)

1 கிராம் தங்கம்............................. 4,804

1 பவுன் தங்கம்...............................38,432

1 கிராம் வெள்ளி.............................68.30

1 கிலோ வெள்ளி.............................68,300

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நடிகர் விஜய்யின் நிஜ வாழ்க்கை சம்பவம் ‘ஸ்டார்’ படத்துக்கு உத்வேகம்!

சட்டப் படிப்புகளுக்கு மே 10 முதல் விண்ணப்பிக்கலாம்

ரிங்கு சிங் மனம் தளரக் கூடாது: சௌரவ் கங்குலி

சீன நெடுஞ்சாலை உடைப்பு: துரிதமாக செயல்பட்ட டிரக் ஓட்டுநருக்கு பாராட்டு

இந்தியன் - 2 வெளியீட்டில் மாற்றம்?

SCROLL FOR NEXT