FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

தேசிய ஜனநாயகக் கூட்டணி மாநாட்டு முகப்பில் பெரியார் படம் அகற்றப்பட்டது!

மதுரையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி மாநாட்டு முகப்பில் பெரியார் படம் அகற்றப்பட்டுள்ளது பற்றி...

Updated On : 28 பிப்ரவரி 2026, 3:44 pm IST
பகிர்:

மதுரையில் நாளை(மார்ச் 1) நடைபெறவுள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணி மாநாட்டின் நுழைவாயிலின் முகப்பில் பெரியார் படம் இடம்பெற்றிருந்த நிலையில் அது தற்போது அகற்றப்பட்டுள்ளது.

மதுரையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி மாநாட்டில் கலந்துகொள்ளவும் பல்வேறு திட்டங்களைத் தொடங்கிவைக்கவும் பிரதமர் மோடி இன்று(பிப். 28) இரவு சென்னை வரவுள்ளார்.

நாளை(மார்ச் 1) மாலை மதுரையில் பிரமாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள என்டிஏ மாநாட்டில் பிரதமர் மோடி மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.

Advertisement

Advertisement

பிரதமர் மோடி பங்கேற்கும் கூட்டம் என்பதால் அனைத்து வசதிகளுடன் கூடிய பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

மாநாட்டுக்கு பிரமாண்ட நுழைவுவாயில் அமைக்கப்பட்டுள்ளது. அலங்கார வளைவின் முகப்பில் பெரியார், அண்ணா படங்கள் இடம்பெற்றிருந்தன.

பெரியார் படம் குறித்து பேசப்பட்ட நிலையில் தற்போது முகப்பில் இருந்த பெரியாரின் படம் அகற்றப்பட்டுள்ளது.

பாஜக வலியுறுத்தியதால் அதிமுக, பெரியாரின் படத்தை நீக்கியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

summary

Periyar photo removed in NDA conference entrance at Madurai

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments