தமிழ்நாடு

காமயகவுண்டன்பட்டியில் உலக சர்க்கரை, நிமோனியா, புற்றுநோய் விழிப்புணர்வு தினம்

DIN

கம்பம்: தேனி மாவட்டம் காமயகவுண்டன்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உலக சர்க்கரை நோய்,உலக நிமோனியா மற்றும் புற்றுநோய் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

தேனி மாவட்டம் காமயகவுண்டன்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் புதன்கிழமை
உலக சர்க்கரை நோய், உலக நிமோனியா மற்றும் புற்றுநோய் தின விழிப்புணர்வு தேனி மாவட்ட துணை இயக்குநர் உத்தரவின் பேரில் நடைபெற்றது.

மருத்துவ அலுவலர் சுதா தலைமை தாங்கினார், மருத்துவர் முருகானந்தம் முன்னிலை வகித்தார்.

நிகழ்ச்சியில் சித்த மருத்துவ அலுவலர் சிராஜ்தீன் பேசும் போது, சர்க்கரை நோயின் ஆரம்ப அறிகுறிகள், கண்டறியும் வழிமுறைகள், கரோனா பெருந்தொற்று காலத்தில் நிமோனியா நோய் பற்றிய விழிப்புணர்வு,
அனைத்து மக்களுக்கும் உணவியல், வாழ்வியல் கோளாறுகளால் ஏற்படும் பல்வேறு புற்றுநோய்கள் பற்றிய விழிப்புணர்வு பற்றி பேசினார்.

மேலும் புற்றுநோயின் அறிகுறிகள், சிறிய அறிகுறிகளையும் புறந்தள்ளாமல் உடல் நலத்திற்கு ஊறு விளைவிக்கும் தீய பழக்க வழக்கங்கள் போன்றவை பற்றியும் தெளிவாக கூறினார்.

இந்நிகழ்ச்சியில் மருந்தாளுநர்கள் கணேசன், பசும்பொன், செவிலியர்கள் சுப்புலட்சுமி, ரூபி, இந்திராணி மற்றும் பணியாளர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 தோ்வு: மாநில அளவில் 6-ஆவது இடம்

திருச்சி பாா்வை குறைபாடுடைய பெண்கள்பள்ளி தொடா்ந்து நூறு சதவீதம் தோ்ச்சி

பிளஸ் 2 தோ்வு முடிவுகள் திருச்சி மாவட்டத்தில் 95.74 சதவீதம் போ் தோ்ச்சி

துப்பாக்கிச் சுடும் பயிற்சி வீரமலைப்பாளையத்தில் நடமாட தடை விதிப்பு

9 அரசுப் பள்ளிகள் நூற்றுக்கு நூறு

SCROLL FOR NEXT