தமிழ்நாடு

சிங்கப்பெருமாள் கோயில் அருகே இளைஞர் படுகொலை

DIN

செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோயில் அருகே இளைஞர் சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சிங்கப்பெருமாள் கோயில் ஜேஜே நகர் பகுதியை சேர்ந்து பாபு என்கிற குண்டுபாபு என்பவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பரணி என்பவருக்கும் கடந்த நான்கைந்து ஆண்டுகளாக நிலப் பிரச்னை காரணமாக அடிக்கடி தகராறு நடைபெற்று வந்ததாக கூறப்படுகிறது. 

இதற்கிடையில் கடந்த தீபாவளி அன்று இருவரும் தனித்தனியே மது அருந்திக்கொண்டிருந்த போது இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டு பாபு பரணியை ஒருமையில் கெட்ட வார்த்தையில் திட்டியதாகவும் அப்போது பரணி பாபுவிடம் உன்னை விரைவில் காலி பண்ணிவிடுவதாக கூறி, அதற்காக திட்டமிட்டு அதற்கான தருணத்தை எதிர்பார்த்து கொண்டிருந்தார். 

இந்நிலையில், இன்று ஹோட்டலில் வேவையை முடித்துவிட்டு வீடு திரும்பும்போது சிங்கபெருமாள் கோயில் எம்ஜிஆர் நகர் பகுதியில் பாபுவை வழிமறைத்து பரணி தன் கூட்டாளிகளுடன் சேர்த்து அறிவாளால் சரமாரியாக வெட்டி தலையை துண்டாக சாலையில் வீசிவிட்டு தப்பியோடி விட்டனர்.

தகவலறிந்நு வந்த மறைமலைநகர் காவல்துறையினர் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், தப்பியோடிய குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர். 

இதில் கொலை செய்யப்பட்ட பாபு மீது ஏற்கெனவே கொலை வழக்கு நிலுவையில் இருப்பதாகவும் பரணி அப்பகுதியில் கட்டப்பஞ்சாயத்து செய்து கொண்டு ரவுடியாக வலம் வருவதாகவும்  விரைவில் குற்றவாளிகளை பிடித்து விடுவதாகவும் காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது. பாபுவுக்கு திருமணமாகி 6 மாத கைக்குழந்தை இருப்பது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜீ மீடியா தலைமைச் செயல் அலுவலர் திடீர் ராஜிநாமா!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: முதல்-10 இடங்களில் பரமத்தி..!

நக்சலைட்டுகள் பதுக்கியிருந்த வெடிகுண்டுகள் பறிமுதல்

நளதமயந்தி தொடரிலிருந்து நீக்கப்பட்ட பிரியங்கா....புதிய நாயகி யார்?

எம்.எஸ்.தோனியின் சாதனையை முறியடித்த ரவீந்திர ஜடேஜா!

SCROLL FOR NEXT