முகப்பு
தமிழ்நாடு

கிணற்றில் விழுந்த யானை மீட்பு

தருமபுரி அருகே கிணற்றில் விழுந்த யானை 16 மணிநேரப் போராட்டத்துக்கு பிறகு மீட்கப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:54 PM
பகிர்:

தருமபுரி அருகே கிணற்றில் விழுந்த யானை 16 மணிநேரப் போராட்டத்துக்கு பிறகு மீட்கப்பட்டது.

தருமபுரி மாவட்டம், பஞ்சப்பள்ளி அருகே 50 அடி விவசாய கிணற்றில் 12 வயது மதிக்கத்தக்க ஆண் யானை ஒன்று இன்று விழுந்தது. உடனே இதுகுறித்து, வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு யானை மீட்கும் பணி நடைபெற்று வந்தது.  

யானையை மீட்கும் பணியை தருமபுரி மாவட்ட ஆட்சியர் கார்த்திகா நேரில் பார்வையிட்டார். 50 அடி ஆழ கிணற்றில் விழுந்த யானையை மீட்பதற்காக இரண்டு முறை மயக்க ஊசி செலுத்தப்பட்டது. 

மயக்க ஊசி செலுத்தி மீட்கும்போது கயிறு நழுவியதால் கிணற்றின் பக்கவாட்டில் யானை விழுந்தது. சுமார் 13 மணிநேர போராட்டத்துக்கு பின் கிரேன் உதவியுடன் வனத்துறை, தீயணைப்புத்துறை வீரர்கள் யானையை பத்திரமாக மீட்டனர். 

முழு கட்டுரையைப் படிக்க →