கம்பம் அருகே சண்முகா நதி அணை நிரம்பியது
வடகிழக்கு பருவ மழை காரணமாக, நீர்பிடிப்பு பகுதியான பச்சக்கூமாச்சி மலைப்பகுதிகளில் அதிக நீர்வரத்து ஏற்பட்டுள்ளதால், சண்முகா நதி அணை அதன் கொள்ளளவை எட்டியது.
கம்பம்: வடகிழக்கு பருவ மழை காரணமாக, நீர்பிடிப்பு பகுதியான பச்சக்கூமாச்சி மலைப்பகுதிகளில் அதிக நீர்வரத்து ஏற்பட்டுள்ளதால், சண்முகா நதி அணை அதன் கொள்ளளவை எட்டியது.
தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சண்முகா நதி அணையின் நீர்பிடிப்பு பகுதியான பச்சக்கூமாச்சி மலைப்பகுதியில் வடகிழக்கு பருவமழை காரணமாக விடிய விடிய மழை பெய்தது. இதனால் புதன்கிழமை அணையின் நீர்மட்டம் 45.90 அடி உயரமாக இருந்தது, வியாழக்கிழமை,52.30 அடி உயரத்தை எட்டியது. அணையின் மொத்த உயரம் 52.55 அடியாகும். புதன்கிழமை, 8 அடி உயரத்தை எட்டிய நிலையில் வியாழக்கிழமை, 6.40 அடி உயரமாகி அதன் முழு கொள்ளளவை எட்டியது குறிப்பிடத்தக்கது.
அணை நிலவரம்: நீர்மட்டம் 52.30 அடியாகவும், நீர் இருப்பு 78.60 மில்லியன் கன அடியாகவும், அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு, 242 கன அடியாகவும் இருந்தது, அணையிலிருந்து நீர் வெளியேற்றம் இல்லை.
Advertisement
Advertisement
சண்முகா நதி அணை முழு கொள்ளளவை வியாழக்கிழமை எட்டி, மறுகால் பாய்ந்து வருகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.