முகப்பு
தமிழ்நாடு

நிவர் புயல்: தாழ்வான பகுதிகளுக்கு ரேஷன் பொருள்கள் அனுப்பிவைப்பு

நிவர் புயலால் பாதிக்கப்பட வாய்ப்புள்ள தாழ்வான பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளுக்கு உணவுப் பொருள்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:56 PM
அமைச்சர் காமராஜ்
பகிர்:

நிவர் புயலால் பாதிக்கப்பட வாய்ப்புள்ள தாழ்வான பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளுக்கு உணவுப் பொருள்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். 

நிவர் புயல் முன்னெச்சரிக்கைகள் குறித்து மத்திய அரசும், தமிழக அரசும் நடவடிக்கை எடுத்து வருகிறது.

அதன் ஒருபகுதியாக, திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் நிவர் புயல் தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

இதன்பின்னர், நிவர் புயலால் பாதிக்கப்பட வாய்ப்புள்ள தாழ்வான பகுதிகள் என்று கண்டறியப்பட்டுள்ள 4,713 இடங்களில் உள்ள ரேஷன் கடைகளுக்கு அத்தியாவசிய உணவுப் பொருள்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். 

முழு கட்டுரையைப் படிக்க →