தங்கம் விலை சவரனுக்கு ரூ.832 குறைந்தது!
சென்னையில் ஒரு சவரன் தங்கத்தின் விலை இன்று ரூ.832 குறைந்து ரூ.37,152-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.832 குறைந்து ரூ.37,152-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த செப்டம்பர் மாதத்தில் இருந்து தங்கத்தின் விலை படிப்படியாக குறைந்து வருகிறது. சமீபமாக ஏற்ற, இறக்கத்தில் இருந்துவரும் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.832 குறைந்துள்ளது. செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி, ஒரு சவரன்(22 காரட்) தங்கத்தின் விலை ரூ. 37,152-க்கு விற்பனை ஆகிறது. கிராமுக்கு ரூ.104 குறைந்து ரூ.4,644-க்கு விற்பனை ஆகிறது.
ஒரு கிராம் வெள்ளி ரூ. 1.80 குறைந்து ரூ. 64.50-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ. 64,500-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ. 43 ஆயிரத்தை தாண்டி வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டது குறிப்பிடத்தக்கது.
செவ்வாய்க்கிழமை விலை நிலவரம் (ரூபாயில்)
1 கிராம் தங்கம்............................. 4,644
1 சவரன் தங்கம்............................... 37,152
1 கிராம் வெள்ளி............................. 64.50
1 கிலோ வெள்ளி............................. 64,500
திங்கள்கிழமை விலை நிலவரம் (ரூபாயில்)
1 கிராம் தங்கம்............................. 4,748
1 சவரன் தங்கம்...............................37,984
1 கிராம் வெள்ளி.............................66.30
1 கிலோ வெள்ளி.............................66,300