முகப்பு
தமிழ்நாடு

சென்னையிலிருந்து 430 கிமீ தொலைவில் நிவர் புயல்: வானிலை ஆய்வு மையம்

நிவர் புயல் சென்னையில் இருந்து 430 கிமீ தொலைவில் நிலை கொண்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:57 PM
சென்னையிலிருந்து 430 கிமீ தொலைவில் நிவர் புயல்
பகிர்:

நிவர் புயல் சென்னையில் இருந்து 430 கிமீ தொலைவில் நிலை கொண்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன், 

நிவர் புயல் தற்போது தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் புதுச்சேரிக்கு கிழக்கு -தென்கிழக்கே 380 கிமீ தொலைவிலும், சென்னையில் இருந்து 430 கிமீ தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. 

 தற்போது மணிக்கு 5 கிமீ தொலைவில் நகரத் துவங்கியுள்ளது. அடுத்த 12 மணி நேரத்தில் தீவிரப் புயலாகவும், அதையடுத்த 12 மணி நேரத்தில் அதி தீவிரப் புயலாகவும் வலுப்பெறும். 

வடமேற்கு திசையில் நகர்ந்து காரைக்கால் - மாமல்லபுரம் இடையே புதுச்சேரிக்கு அருகே அதி தீவிரப் புயலாக நாளை பிற்பகல் கரையைக் கடக்கும். இதையடுத்து அந்த பகுதிகளில் மணிக்கு 120 - 130 கிமீ வேகத்தில் காற்று வீசக்கூடும். சமயத்தில் 145 கிமீ வேகத்தில் காற்று வீசும். 

மேலும், புயல் கரையை கடக்கும் நேரத்தில் நாகை, காரைக்கால், மயிலாடுதுறை, கடலூர், புதுவை, விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் மணிக்கு 120-130 கிமீ வேகத்திலும் சில சமயங்களில் மணிக்கு 145 கிமீ வேகத்திலும் காற்று வீசக்கூடும். 

அதேபோன்று திருவாரூர்,காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் மணிக்கு 80-90 கிமீ வேகத்தில் காற்று வீசும். 

சென்னையை பொருத்தவரை கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்று தெரிவித்தார். 

முழு கட்டுரையைப் படிக்க →