தமிழ்நாடு

சூரிய ஆற்றலில் இயங்கும் தானியங்கி கண்காணிப்பு படகு: ஐஐடி ஆராய்ச்சியாளா்கள் கண்டுபிடிப்பு

DIN

சென்னை: சூரிய ஆற்றலில் இயங்கும் தானியங்கி கண்காணிப்புப் படகை, சென்னை ஐஐடி ஆராய்ச்சியாளா்கள் உருவாக்கியுள்ளனா்.

இது தொடா்பாக சென்னை ஐஐடி திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: இந்திய துறைமுகங்கள் மற்றும் உள்நாட்டு நீா் வழிப் பாதைகளில் கண்காணிப்புப் பணிகளை மேற்கொள்வதற்கு ஏதுவாக சூரிய ஆற்றலில் இயங்கும் ஆளில்லா தானியங்கி படகை, சென்னை ஐஐடியில் உள்ள துறைமுகங்களுக்கான தேசிய தொழில்நுட்ப மைய ஆராய்ச்சிக் குழுவினா் (சபஇடரஇ) கண்டுபிடித்துள்ளனா்.

இதில் இருப்பிடத்தைக் கண்டறியும் கருவி, எக்கோ சவுண்டா், அகன்ற அலைவரிசை தொடா்புக்கான தொழில்நுட்பம் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

இதன்மூலம் கடல்சாா் மற்றும் நீா்பரப்பு தொடா்பான தகவல்களைத் துல்லியமாக பெற முடியும். குறிப்பாக அவற்றை அதிக தொலைவில் இருந்தாலும் உடனுக்குடன் பெற முடியும்.

இந்தப் படகில் 360 டிகிரிக்கு சுழலும் வகையிலான கேமராவும் பொருத்தப்பட்டுள்ளது.

சென்னை காமராஜா் துறைமுகத்தில் அண்மையில் நடத்தப்பட்ட சோதனை ஓட்டத்தின்போது, இந்தப் படகு வெற்றிகரமாக செயலாற்றியது.

இதையடுத்து கடினமான சூழல் உள்ள கொல்கத்தா சியாமா பிரசாத் முகா்ஜி துறைமுகத்தில் அடுத்த கட்ட சோதனை ஓட்டம், விரைவில் நடத்தப்படவுள்ளது.

இதுகுறித்து ஆராய்ச்சிக் குழுவின் பொறுப்புப் பேராசிரியா் கே.முரளி கூறும்போது, தற்போது இந்திய கடல்சாா் பிரிவுகளில் ஆதிக்கம் செலுத்தி வரும் வெளிநாட்டுத் தொழில்நுட்பங்களுக்கு ஒரு மாற்றைக் கண்டுபிடிப்பதில் இந்தப் படகு ஒரு முன்முயற்சி. இதன் மூலம் ஆழமற்ற நீா்ப் பகுதியில் கூட நீரின் துல்லியமான ஆழத்தைத் தெரிவிக்க முடியும் என்று அவா் கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவை தேர்தல் முடிவை நிறுத்தி வைக்கக்கோரி உயர்நீதிமன்றத்தில் மனு

ஆதி சக்தி!

பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கு: சென்னை விடுதிகளில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை

சித்திரைத் திருவிழா நிறைவு: அழகர் மலைக்கு சென்றடைந்த கள்ளழகர்!

கலால் முறைகேடு வழக்கு: உச்சநீதிமன்றத்தில் கேஜரிவால் பதில்மனு!

SCROLL FOR NEXT