தமிழ்நாடு

பாலாற்றில் வெள்ளப் பெருக்கு: கரையோர மக்களுக்கு அபாய எச்சரிக்கை

DIN

பாலாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டிருப்பதால் கரையோர மக்களுக்கு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

காவேரிப்பாக்கம் அணைக்கட்டிலிருந்து திறந்துவிடப்படும் உபரி நீரானது பாலாற்றின் வழியாக, வினாடிக்கு சுமாா் 44 ஆயிரம் கன அடி நீராக வந்து கொண்டிருப்பதால் ராணிப்பேட்டை மாவட்டத்தில் 40 கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

நிவர் புயல் தாக்கம் எதிரொலியாக தமிழகம் மற்றும் ஆந்திர மாநிலத்தில் பெய்த கன மழை காரணமாக  ராணிப்பேட்டை பாலாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

தற்போது வாலாஜாபேட்டை அடுத்த பாலாற்று அணைக்கட்டு பகுதியில் சுமார் 44 ஆயிரம் கன அடி நீர்வரத்து உள்ள நிலையில் கிளை கால்வாய் வழியாக சுமார் 4 ஆயிரம் கன அடி நீர் காவேரிப்பாக்கம் ஏரிக்கு திருப்பிவிடப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்டம் முழுவதும் சுமார் மில்லி மீட்டர் 712.3மழை பதிவாகியுள்ளன நிலையில், மாவட்டத்திலேயே அதிகபட்சமாக சோளிங்கரில் 255 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. இதன் காரணமாக மாவட்டத்தில் 27 ஏரிகள் முழுக்கொள்ளவை எட்டியுள்ளன.

இந்த நிலையில், பாலாற்றின் இரு கரையோரங்களிலும் உள்ள கிராம மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளதாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சன் ரைசர்ஸ் பேட்டிங்; அணியில் மீண்டும் மயங்க் அகர்வால்!

கொல்லாத கண்ணாரா - விடியோ பாடல்

‘பாலிவுட் நடிகர்களில் அதிகம் மதிக்கப்படும் இரண்டாவது நபர் நான்’ : கங்கனாவின் வைரல் விடியோ!

பிரஜ்வல் பாலியல் வன்கொடுமை: பாதிக்கபட்டோர் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

படிக்காத பக்கங்கள் படத்தின் டிரெய்லர்

SCROLL FOR NEXT