கனமழையால் பாதிக்கப்பட்ட 70 இருளர் குடும்பங்களுக்கு நிவாரணப் பொருள்கள் வழங்கல் 
தமிழ்நாடு

கனமழையால் பாதிக்கப்பட்ட 70 இருளர் குடும்பங்களுக்கு நிவாரணப் பொருள்கள் வழங்கல்

கனமழையால் பாதிக்கப்பட்ட மேட்டுக்கொளத்தூர் பகுதியைச் சேர்ந்த 70 இருளர் குடும்பங்களுக்கு மளிகை பொருள்கள், போர்வைகள், வேட்டி,சேலை உள்ளிட்ட நிவாரணப் பொருள்களை...

DIN

ஸ்ரீபெரும்புதூர்: கனமழையால் பாதிக்கப்பட்ட மேட்டுக்கொளத்தூர் பகுதியைச் சேர்ந்த 70 இருளர் குடும்பங்களுக்கு மளிகை பொருள்கள், போர்வைகள், வேட்டி,சேலை உள்ளிட்ட நிவாரணப் பொருள்களை ஸ்ரீபெரும்புதூர் சட்டப்பேரவை உறுப்பினர் கே.பழனி வெள்ளிக்கிழமை வழங்கினார். 

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம் கொளத்தூர் ஊராட்சிக்குள்பட்ட மேட்டுக்கொளத்தூர் பகுதியில் 70 குடும்பங்களில் இருளர் இனமக்கள் வசித்து வருகின்றனர். வடகிழக்கு பருவமழை மற்றும் நிவர் புயல் காரணமாக ஸ்ரீபெரும்புதூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த நான்கு நாள்களாக கனமழை பெய்ததால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மேட்டுக்கொளத்தூர் பகுதியைச் சேர்ந்த இருளர் குடும்பங்களுக்கு நிவாரண பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி கடந்த வெள்ளிக்கிழமை மேட்டுக்கொளத்தூர் பகுதியில் நடைபெற்றது. 

ஸ்ரீபெரும்புதூர் நகர கூட்டுறவு வீட்டுவசதி சங்க தலைவர் போந்தூர் செந்தில்ராஜன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீபெரும்புதூர் சட்டப்பேரவை உறுப்பினர் கே.பழனி, மாவட்ட செயலாளர் சோமசுந்தரம் ஆகியோர் கலந்துக்கொண்டு 70 இருளர் இன குடும்பங்களுக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட மளிகைப்பொருட்கள், வேட்டி, சேலை, போர்வைகள், பாய் உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை வழங்கினர். 

இந்த நிகழ்ச்சியில் முன்னாள் ஒன்றியகுழு தலைவர் சிவகுமார், ஸ்ரீபெரும்புதூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவர் உலகநாதன், முன்னாள் ஒன்றியகுழு உறுப்பினர்கள் செங்காடு பாபு, சுந்தரராஜன் கொளத்தூர் அதிமுக நிர்வாகிகள் மாயா, ராமசந்திரன் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எதைப் பற்றியும் கவலைப்பட மாட்டார்கள் இவர்கள்: தினப்பலன்கள்!

இரு மதுக் கடைகளில் பூட்டை உடைத்து திருட முயற்சி

லாரி கவிழ்ந்து விபத்து: ஓட்டுநா் காயம்

தண்டவாளத்தில் வெட்டுக் காயங்களுடன் ஆண் சடலம் மீட்கப்பட்ட வழக்கு: பெண் உள்பட 4 போ் கைது

அருணாசலேஸ்வரா் கோயிலில் பக்தா்கள் கூட்டம் அலைமோதல்

SCROLL FOR NEXT