உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள்: நரிக்குறவ மக்களுக்கு நல உதவி
திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு நரிக்குறவர் இன மக்களுக்கு நல உதவிகள் வழங்கப்பட்டது.
கிருஷ்ணகிரி: திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு நரிக்குறவர் இன மக்களுக்கு நல உதவிகள் வழங்கப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த காட்டேரி ஊராட்சிக்குள்பட்ட நரிக்குறவர் கிராமத்தில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு நல உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு லட்சுமி மருத்துவமனை நிர்வாக இயக்குநர் நிர்மலா கந்தசாமி தலைமை வகித்தார், ஒன்றியக்குழு உறுப்பினர் கோவிந்தசாமி, ஒன்றிய துணைச் செயலாளர் திருப்பதி, தகவல் தொழில் நுட்ப அணி தொகுதி ஒருங்கிணைப்பாளர் லயோலா ராஜசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
Advertisement
Advertisement
ஊத்தங்கரை லட்சுமி மருத்துவமனை நிர்வாக இயக்குநர் நிர்மலா கந்தசாமி நரிக்குறவர் இன மக்களுக்கு ரூ.1000 மதிப்பிலான அரிசி, பருப்பு மளிகை பொருள்கள், காய்கறிகள் அடங்கிய தொகுப்பினை 50 நபர்களுக்கு வழங்கினார். நிகழ்ச்சியில் திமுக நிர்வாகிகள் மற்றும் ஊர் மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.