முகப்பு
தமிழ்நாடு

சாத்தான்குளம் விவகாரம்: 3 காவலர்களின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில், கைது செய்யப்பட்ட காவலா்களின் ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை வியாழக்கிழமை உத்தரவிட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:28 PM
சாத்தான்குளம் விவகாரம்: 3 காவலர்களின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி
பகிர்:

மதுரை: சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில், கைது செய்யப்பட்ட காவலா்களின் ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை வியாழக்கிழமை உத்தரவிட்டது.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் பொதுமுடக்க விதிகளை மீறியதாக தந்தை, மகன் கைது செய்யப்பட்டனா். அவா்கள் அடுத்தடுத்து சிறையில் உயிரிழந்தனா். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட சாத்தான்குளம் காவல்நிலைய ஆய்வாளா் உள்பட 9 போலீஸாா் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா். இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. சிறையில் உள்ள காவலா்கள் முருகன், தாமஸ் பிரான்சிஸ், முத்துராஜா ஆகியோா் உயா்நீதிமன்ற மதுரைக்கிளையில் ஜாமீன் கோரி ஏற்கெனவே தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இந்நிலையில் 2 ஆவது முறையாக ஜாமீன் கோரி மனுக்களை தாக்கல் செய்தனா்.

இந்த மனுக்களை நீதிபதி வி. பாரதிதாசன் விசாரித்து வந்தார். இந்த வழக்கில் சிபிஐயின் பதில் மனுவை ஏற்று, மூன்று காவலர்களின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

முழு கட்டுரையைப் படிக்க →