முகப்பு
தமிழ்நாடு

கரோனா விழிப்புணர்வு வாகனம்: தொடக்கி வைத்தார் சென்னை காவல் ஆணையர்

கரோனா விழிப்புணர்வு வாகனத்தின் பயணத்தை சென்னை பெருநகர காவல் ஆணையார் மகேஷ்குமார் அகர்வால் கொடியசைத்து தொடக்கி வைத்தார்.

Updated On : 2 அக்டோபர், 2020 at 4:27 PM
கரோனா விழிப்புணர்வு வாகனம்: தொடக்கி வைத்தார் சென்னை காவல் ஆணையர்
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:59 PM


கரோனா விழிப்புணர்வு வாகனத்தின் பயணத்தை சென்னை பெருநகர காவல் ஆணையார் மகேஷ்குமார் அகர்வால் கொடியசைத்து தொடக்கி வைத்தார்.

உலகம் முழுவதும் அச்சுறுத்தி வரும் கரோனா தொற்று காரணமாக சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மகேஷ் குமார் அகர்வால் உத்தரவின்பேரில் சென்னை பெருநகரில் கரோனா தொற்று பரவாமல் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் கரோனா தொற்று பாதிக்காமல் பாதுகாப்புடன் பணியில் ஈடுபடவும், பொதுமக்களிடையே கரோனா தொற்று பரவாமல் தடுக்கவும், பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டும், கரோனா தடுப்பு உபகரணங்களான முகக்கவசங்கள், திரவ சுத்திகரிப்பான், கையுறைகள், கபசுர குடிநீர், சத்து பானங்கள் மற்றும் பல பொருட்கள் காவல் ஆளிநர்களுக்கும், பொதுமக்களுக்கும் வழங்கப்பட்டு வருகிறது.

இதன் தொடர்ச்சியாக, உலக அரசியலமைப்பு மற்றும் நாடாளுமன்ற சங்கம் (World Constitution and Parliament Association) சார்பில் உருவாக்கப்பட்ட கரோனா விழிப்புணர்வு வாகனத்தை, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மகேஷ் குமார் அகர்வால், இன்று கொடியசைத்துத் துவக்கி வைத்தார். 

Advertisement

இந்த விழிப்புணர்வு வாகனம் சென்னை மற்றும் இதர பகுதிகளில் சென்று கரோனா பரவாமல் தடுப்பது குறித்த அரசு வழங்கிய விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மேற்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வாகனத்தை அனைத்து வசதிகளுடன் மேற்கண்ட அமைப்பை சார்ந்த சுந்தர் என்பவர் விழிப்புணர்வு பணிகளுக்காக அர்ப்பணித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.