முகப்பு
தமிழ்நாடு

யாரையும் ஒருமையில் பேசவில்லை: துரைமுருகன் விளக்கம்

கூட்டணி தொடர்பாக யாரையும் ஒருமையில் பேசவில்லை என்று திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் விளக்கமளித்துள்ளார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:30 PM
கோப்புப் படம்.
பகிர்:

கூட்டணி தொடர்பாக யாரையும் ஒருமையில் பேசவில்லை என்று திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் விளக்கமளித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், நேற்று (2.10.2020) கிராம சபைக் கூட்டத்தின் முடிவில், பத்திரிகையாளர் சந்திப்பின்போது, என்னை சந்தித்த செய்தியாளர்கள் “தி.மு.க. கூட்டணியில் யார் யார் இருப்பார்கள்?” என்று ஒரு கேள்வி கேட்டார்கள்.

அதற்கு, “இப்பொழுது எதையும் அறுதியிட்டு, இறுதியிட்டு சொல்ல முடியாது. தேர்தல் காலங்களில் இறுதி நேரத்தில்கூட, கட்சிகள் இடம் மாறுவது உண்டு. அப்படி, இங்கே இருப்பவர்கள் அங்கே போவதும், அங்கே இருப்பவர்கள் இங்கே வருவதுங்கூட கடந்த காலங்களில் நடைபெற்றிருக்கிறது” என்றுதான் நான் கூறினேன்.

வாயில், ‘மாஸ்க்’ அணிந்து பேசிக் கொண்டிருந்த காரணத்தால், சில வார்த்தைகள் தவறுதலாக வந்திருக்கலாம். அதனை நான் ஒருமையில் பேசியதாக சில பத்திரிகைகள் வெளியிட்டிருப்பதாகவும், அதனால், எங்களிடத்தில் ஆழ்ந்த உறவோடு இருக்கக்கூடிய சிலர் வருத்தம் அடைந்திருப்பதாகவும் எனக்கு செய்திகள் வந்தது. நான் அவ்வாறு கூறவில்லை. அப்படி நான் கூறியதாக எடுத்துக் கொண்டாலும், அதற்காக நான் மெத்த வருத்தப்படுகிறேன்.

பொதுவாக, நான் பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற பிறகு, எனது பேச்சு மற்றும் நடவடிக்கைகளை மாற்றிக் கொண்டிருக்கிறேன். எனவே, யாருடைய உள்ளமாவது வருத்தப்பட்டிருந்தால், அதற்காக நான், மிகவும் வருத்தப்படுகிறேன்.

ஆனால், எல்லோரிடத்திலும் எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. நீண்டகாலமாக என்னை அறியதவர்கள், அப்படி நினைக்கமாட்டார்கள் என்று கருதுகிறேன். இருந்தாலும், இனி இப்படி நிகழா வண்ணம் நானும் நடந்து கொள்வேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். 

முழு கட்டுரையைப் படிக்க →