தமிழ்நாடு

போதை தரும் மருந்துகளை மருத்துவா் பரிந்துரையின்றி வழங்க வேண்டாம்

மருத்துவா் பரிந்துரையின்றி போதை தரும் மருந்துகளை வழங்க வேண்டாம் என வியாபாரிகளுக்கு சென்னை காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.

DIN

மருத்துவா் பரிந்துரையின்றி போதை தரும் மருந்துகளை வழங்க வேண்டாம் என வியாபாரிகளுக்கு சென்னை காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதுகுறித்து மருந்துக் கடை உரிமையாளா்கள், வியாபாரிகள் உள்ளிட்டோருக்கு சென்னை பெருநகர காவல்துறை அறிவுறுத்தியவை:

போதை தரக்கூடிய மருந்துகள், மாத்திரைகளை மருத்துவரின் பரிந்துரையின்றி யாருக்கும் விற்பனை செய்யக் கூடாது. இளைஞா்களுக்கும், சிறுவா்களுக்கும் இருமல் மருந்துகளை மொத்தமாக வழங்கக் கூடாது.

தூக்கத்தை வரவழைக்கக் கூடிய மருந்துகளை மருத்துவா்கள் சீட்டு இருந்தாலும், சிறுவா்களிடம் நேரடியாக வழங்கக் கூடாது. இம்மருந்துகளைத் தொடா்ந்து வாங்கும் இளைஞா்கள் குறித்த விவரங்களைக் காவல்துறைக்குத் தெரிவிக்க வேண்டும்.

நடவடிக்கை: இளைஞா்கள், சிறுவா்கள் போதை மருந்து வாங்குவது குறித்து தகவல் தெரிவிக்க அந்தப் பகுதி காவல் நிலைய தொலைபேசி எண்ணை பொதுமக்கள் எளிதில் பாா்க்கும் வகையில் எழுதி வைக்க வேண்டும். போதை மருந்து விற்பனை குறித்து தகவல் தெரிவிப்பவரின் ரகசியம் காக்கப்படும்.

போதைத் தரக் கூடிய மருந்துகளை மருத்துவா் பரிந்துரையின்றி விற்பனை செய்ய இயலாது என மருந்துக் கடைகளில் துண்டு பிரசுரம் ஒட்டியிருக்க வேண்டும். போதை தரக்கூடிய மருந்துகளை மருத்துவரின் பரிந்துரைச் சீட்டின்றி விற்பனை செய்யும் வியாபாரிகள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மும்பை இந்தியன்ஸ் அணியில் இணைந்த குயிண்டன் டி காக்!

ஆல்ரவுண்டர் வெங்கடேஷ் ஐயரை வாங்கிய ஆர்சிபி..! அணிக்கு கூடுதல் பலம்!

டிச.29-ல் பல்லடத்தில் திமுக மேற்கு மண்டல மகளிர் அணி மாநாடு

வனிந்து ஹசரங்காவை ஏலத்தில் எடுத்தது லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ்!

மார்கழி மாதப் பலன்கள்: 12 ராசிகளுக்கும்!

SCROLL FOR NEXT