முகப்பு
தமிழ்நாடு

எடப்பாடி ஆட்சியில் எந்தத் தரப்பும் நிம்மதியாக இல்லை: மு.க.ஸ்டாலின்

எடப்பாடி ஆட்சியில் எந்தத் தரப்பும் நிம்மதியாக இல்லை என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:30 PM
பகிர்:

எடப்பாடி ஆட்சியில் எந்தத் தரப்பும் நிம்மதியாக இல்லை என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.

கன்னியாகுமரி கிழக்கு - மேற்கு மாவட்டக் கழகத்தின் சார்பில் நடைபெற்ற ‘முப்பெரும் விழாவில்’ திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று காணொலிக் காட்சி வாயிலாகப் பங்கேற்று உரையாற்றினார். அப்போது, இன்றைக்கு மத்தியில் இருக்கும் ஆட்சியாக இருந்தாலும் -மாநிலத்தை ஆளும் ஆட்சியாக இருந்தாலும், அவை விவசாயிகளை மதிக்கவில்லை; விவசாயத்தையும் மதிக்கவில்லை. ஏழைத் தாயின் மகன் நான்" என்கிறார் பிரதமர் மோடி. நானும் விவசாயிதான் என்கிறார் பழனிசாமி. ஆனால் இவர்கள் இருவரும் ஏழைகளையும் காப்பாற்றவில்லை. விவசாயிகளையும் காப்பாற்றவில்லை.

இவர்கள் மக்களுக்காக ஆட்சி நடத்தவில்லை, கார்ப்பரேட்டுகளுக்காகத் தான் ஆட்சி நடத்துகிறார்கள். இந்த வேளாண் சட்டம் எவ்வளவு மோசமானது என்பதை அனைவரும் பொதுமக்களுக்குப் பிரச்சாரம் செய்ய வேண்டும். விவசாயிகள் உற்பத்தி செய்த பொருட்களுக்கு குறைந்த பட்ச அடக்கவிலையை இந்தச் சட்டங்கள் சொல்லவே இல்லை! விவசாயி என்ன விளைவிக்கலாம், யாருக்கு விற்கலாம், என்ன விலைக்கு விற்கலாம் என்பதைத் தீர்மானிக்கும் உரிமையை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வழங்குகிறது!

எடப்பாடி ஆட்சியில் எந்தத் தரப்பும் நிம்மதியாக இல்லை. அமைச்சரவையில் இருக்கும் 30 பேர் மட்டும் தான் நிம்மதியாக இருக்கிறார்கள். அவர்களும் கடந்த ஒரு வாரமாக நிம்மதியாக இல்லை. ஜெயலலிதா மரணம் அடைந்து இந்த நான்கு ஆண்டுகளில் ஆட்சியே நடக்கவில்லை. அவர்கள் நாற்காலியைக் காக்கும் போராட்டம்தான் நடக்கிறது மக்களை மறந்துவிட்டு, நாற்காலியையே நினைத்துக் கொண்டிருக்கும் கொள்ளைக் கூட்டத்தை விரட்டும் ஜனநாயகப் போராட்டம் தொடங்கிவிட்டது. இவ்வாறு அவர் தெரிவித்தார். 
 

முழு கட்டுரையைப் படிக்க →