தமிழ்நாடு

'தில்லியில் அக். 31 வரை பள்ளிகள் திறக்கப்படாது'

DIN

தில்லியில் கரோனா பெருந்தொற்று காரணமாக அக்டோபர் 31-ஆம் தேதி வரை பள்ளிகள் திறக்கப்படாது என்று துணை முதல்வர் மணீஷ் சிசோடியா தெரிவித்துள்ளார்.

அக்டோபர் 5-ஆம் தேதி வரை பள்ளிகள் திறக்கப்படாது என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தில்லியில் அனைத்துவிதமான பள்ளிகளும் அக்டோபர் 31-ஆம் தேதி வரை திறக்கப்படாது என்றும் அவர் தெரிவித்தார்.
 
கரோனா பெருந்தொற்று காரணமாக நாட்டின் பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கல்வி நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.

கரோனா பரவல் கட்டுக்குள் கொண்டுவரும் முயற்சியில் சுகாதாரத்துறை ஈடுபட்டு வரும் நிலையில், ஊரடங்கில் ஒருசில தளர்வுகளும் அளிக்கப்பட்டன.

மத்திய அரசு வழிகாட்டுதல் நெறிமுறைகளின் படி அக்டோபர் 5-ஆம் தேதி வரை பள்ளிகள் திறக்கப்படாது என்று தில்லி அரசு அறிவித்திருந்தது.

எனினும் தில்லியில் கரோனா பரவல் விகிதம் குறையாததால், அக்டோபர் 31-ஆம் தேதி வரை பள்ளிகள் திறக்கப்படாது என்று துணை முதல்வர் மணீஷ் சிசோடியா தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேட்டுப்பாளையத்தில் மான் இறைச்சி எடுத்துச்செல்ல முயன்ற 6 போ் கைது

நகைத் திருடிய 2 பெண்கள் மீது வழக்குப் பதிவு

செஸ் வீரா் குகேஷுக்கு கனரா வங்கி பாராட்டு

வெப்ப அலைக்கு இளைஞா் உயிரிழந்த விவகாரம்- நேரடி வெயிலில் பணியாற்ற கூடாது: மருத்துவா்கள் அறிவுறுத்தல்

மாநகரில் மேலும் 7 சிக்னல்களில் தற்காலிகப் பந்தல்

SCROLL FOR NEXT