முகப்பு
தமிழ்நாடு

உத்தமபாளையத்தில் ஆபத்தான முல்லைப் பெரியாற்றுப் பாலம்

தேனி மாவட்டம் உத்தமபாளையம் முல்லைப் பெரியாற்றுப் பாலத்தின் பக்கவாட்டு சுவர் ஆபத்தான நிலையில் இருப்பதால் அதனுடைய உயரத்தை அதிகரிக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On : 5 அக்டோபர் 2020, 3:17 pm IST
உத்தமபாளையம் முல்லைப் பெரியாறு பாலம்.
பகிர்:

தேனி மாவட்டம் உத்தமபாளையம் முல்லைப் பெரியாற்றுப் பாலத்தின் பக்கவாட்டு சுவர் ஆபத்தான நிலையில் இருப்பதால் அதனுடைய உயரத்தை அதிகரிக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உத்தமபாளையம் நகரில் மையத்தில் செல்லும் முல்லைப்பெரியாற்றின் குறுக்கை ஆங்கிலேயர் காலத்தில் காட்டப்பட்ட 100 ஆண்டு பழமையான ஆற்றுப்பாலம் உள்ளது. இந்த  குறுகலான ஆற்றுப்பாலத்தில்   அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால்,  அருகேயே மற்றொரு பாலம் அமைக்கப்பட்டு  தற்போது, ஆற்றின் குறுக்கை இரட்டை பாலம் அமைந்துள்ளது.

இந்நிலையில், ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட பழைய ஆற்றுப்பாலத்தில் அவ்வப்போது சாலை போடுவதன் மூலமாக அதனுடைய பக்கவாட்டு சுவரின் உயரம்  குறைந்து விட்டது. இதனால், பாலத்தில் பாதசாரிகள், இருசக்கர வாகனத்தில் செல்பவர்களுக்கு இப்பாலம் பாதுகாப்பு இல்லை எனப் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.

Advertisement

இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், தேசிய நெடுஞ்சாலையாக மாறிவிட்டதால் தென் உத்தமபாளையம் வழியாக  கேரளத்திற்குச்   செல்லும் முக்கிய போக்குவரத்து வழித்தடமாக மாறிவிட்டது. நாளுக்கு நாள் வாகனங்களில் எண்ணிக்கை அதிகமாகிவிட்டது. இதனை அடுத்து முல்லைப்பெரியாற்றின் பக்கவாட்டு சுவர் உயரம் குறைவாக இருப்பதை உயர்ந்த வேண்டும் .

அதே போல, சூர்யநாராயணபுரம் கால்வாய் பாலத்தின் பக்கவாட்டு சுவரின் உயரத்தை அதிகரித்துப் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ய வேண்டும் என்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.