மருத்துவக் கழிவு: காவல்துறை, அரசு அதிகாரிகள் அக்கறையோடு இல்லை - உயர் நீதிமன்றம்
தமிழகத்தில் மருத்துவக் கழிவுகளை தடுக்காதது ஏன்? என்று கேள்வி எழுப்பியிருக்கும் உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, தமிழக காவல்துறை, அரசு அதிகாரிகள் அக்கறையோடு செயல்படவில்லை என்று குற்றம்சாட்டியுள்ளது.
மதுரை: தமிழகத்தில் மருத்துவக் கழிவுகளை தடுக்காதது ஏன்? என்று கேள்வி எழுப்பியிருக்கும் உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, தமிழக காவல்துறை, அரசு அதிகாரிகள் அக்கறையோடு செயல்படவில்லை என்று குற்றம்சாட்டியுள்ளது.
மருத்துவக் கழிவுகள் தமிழகத்தில் கொட்டப்படுவது குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியிருப்பதாவது, கேரள எல்லைக்குள் மருத்துவக் கழிவுகள் செல்லாதவாறு அந்த மாநில காவல்துறையினரும், அதிகாரிகளும் தடுக்கின்றனர். ஆனால், மருத்துவக் கழிவுகளை தடுப்பதில், தமிழக காவல்துறையினரும் அதிகாரிகளும் கேரளத்தைப் போல அக்கறையோடு செயல்படுவதில்லை.
வெளிமாநிலங்களில் இருந்து தமிழகத்துக்குள் மருத்துவக் கழிவுகள் வருவதைத் தடுக்க விதிகள் அல்லது வழிகாட்டுதல்கள் ஏதேனும் உள்ளதா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
மேலும், மருத்துவக் கழிவுகள் தமிழகத்தில் குவிப்பது தொடர்பாக சுகாதாரத் துறை செயலாளர் பதிலளிக்க நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.