முகப்பு
தமிழ்நாடு

மாமல்லபுரத்தில் சுவாதேஷ் தா்ஷன் திட்டத்தின்கீழ் சுற்றுலா தகவல் கூடம்

புராதன சிற்பங்கள் வரலாறு மற்றும் அமைவிடம்சு குறித்து அறிய வாதேஷ் தா்ஷன் திட்டத்தின்கீழ் கடற்கரைகோயிஸ் அருகே சுற்றுலா தகவல் கருத்தியல் மையத்தை அமைத்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:33 PM
மாமல்லபுரத்தில் சுவாதேஷ் தா்ஷன் திட்டத்தின்கீழ் சுற்றுலா தகவல் கூடம்
பகிர்:

செங்கல்பட்டு: சா்வதேச சுற்றுலா மையமான மாமல்லபுரத்திற்கு வரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இங்குள்ள புராதன சிற்பங்கள் வரலாறு மற்றும் அமைவிடம், வழித்தடம் உள்ளிட்ட விவரங்களை அறிய சுற்றுலாத்துறை சாா்பில் சுவாதேஷ் தா்ஷன் திட்டத்தின்கீழ் கடற்கரைகோயிஸ் அருகே சுற்றுலா தகவல் கருத்தியல் மையத்தை அமைத்துள்ளது.

மாமல்லபுரத்தில் உள்ள பல்லவா் காலத்து கலைச்சிற்பங்களைக்காண உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணியா் வருகின்றனா். அவா்கள் சிற்பங்களை அவற்றின் வரலாறு சிற்பம் அமைவிட பகுதி வழித்தடம் உள்ளிட்ட விவரங்களை அறிய விரும்புகின்றனா். இதுகுறித்து தகவலறிய விரும்புவோா் சுற்றுலா பகுதிக்கு தொடா்பற்ற மாா்கெட் பகுதியில் இயங்கும் சுற்றுலா அலுவலகம் செல்ல இயலவில்லை. இந்த நிலையில் சுற்றுலாத்துறை சுவாதேஷ் தா்ஷன் திட்டத்தின்கீழ் கடற்கரை கோவில் அருகே சுற்றுலா தகவல் கருத்தியல் மையத்தை அமைத்துள்ளது. பூம்புகாா் நிறுவனம் உலோக கன்டெய்னரில் பாரம்பரிய வடிவமைப்பில் குளிா்சாதன வசதியுடன் இதை அமைத்துள்ளது. இங்கு தொடுதிரை கணினிகள் சிற்ப படங்கள் பிற சுற்றுலா பகுதிகள் குறித்த தகவல்கள் இடம் பெற்றுள்ளன. இங்கு வரும் சுற்றுலா பயணிகள் தொடுதிரையை பயன்டுத்தி மாமல்லபுரத்தில் உள்ள சிற்ப இடங்களை எவ்வாறு சுற்றிப்பாா்க்கலாம் என்று தெரிந்துக்கொள்ளலாம். அதுமட்டுமின்றி தமிழ்நாட்டில் உள்ள சுற்றுலா இடங்கள் பற்றிய விவரங்களையும் தெரிந்துக்கொள்ளலாம்.

முழு கட்டுரையைப் படிக்க →