தமிழ்நாடு

சேலத்தில் அதிமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

DIN

சேலம்: முதல்வர் வேட்பாளராக எடப்பாடி கே.பழனிசாமி அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவரது சொந்த மாவட்டமான சேலத்தில் அதிமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

வரும் 2021 சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக சார்பில் முதல்வர் வேட்பாளராக தற்போதைய முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி போட்டியிடுவார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து சேலம் அண்ணா பூங்கா வளாகத்தில் உள்ள மறைந்த முதல்வர் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் சிலைக்கு அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

பின்னர் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி கே பழனிசாமி அறிவிக்கப்பட்டதைக் கொண்டாடும் வகையில் பட்டாசு வெடித்து மகிழ்ந்தனர். தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

இதில் முன்னாள் எம்.பி. பன்னீர்செல்வம், முன்னாள் எம்.எல்.ஏ. எம்.கே.செல்வராஜு, முன்னாள் மேயர் சவுண்டப்பன், மாநகர மாவட்ட பொருளாளர் பங்க் வெங்கடாசலம், பகுதிச் செயலாளர்கள் கே.ஆர்.எஸ். சரவணன், முருகன் ஜெகதீஷ் குமார், பாலு, தியாகராஜன்  உள்ளிட்ட  நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேட்டூர் கொளத்தூர் பகுதியில் சூறைக்காற்று: 5 ஆயிரம் வாழைகள் சேதம்

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

‘அரண்மனை 4’ - மிகப்பெரிய வெற்றி: குஷ்புவின் வைரல் பதிவு!

SCROLL FOR NEXT