தமிழ்நாடு

ஜெயலலிதா நினைவிடத்தில் இபிஎஸ், ஓபிஎஸ் மரியாதை

DIN

அதிமுக முதல்வர் வேட்பாளர் அறிவிக்கப்பட்டதை அடுத்து, முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓபிஎஸ், சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.

அதிமுக முதல்வர் வேட்பாளராக அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான எடப்பாடி கே. பழனிசாமி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார். 

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் கூட்டாக இன்று காலை 10 மணிக்கு செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, அதிமுக முதல்வர் வேட்பாளராக எடப்பாடி கே. பழனிசாமியை முன்னிறுத்துவதாக ஓ.பன்னீர் செல்வம் அறிவித்தார். அதேபோன்று கட்சியையும், ஆட்சியையும் வழிநடத்த 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. 

தொடர்ந்து, முதல்வர் வேட்பாளர் அறிவிக்கப்பட்டதை அடுத்து, முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓபிஎஸ், மற்றும் அமைச்சர்கள், அதிமுக தொண்டர்கள் பலர் சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

”உண்மை விரைவில் வெளிச்சத்திற்கு வரும்” -பாலியல் புகாரில் சிக்கிய பிரஜ்வல் ரேவண்ணா

இந்த மாதம் இப்படித்தான்!

”டீக்கடைக்காரரால் என்ன செய்ய முடியும்? விமர்சித்த காங்கிரஸின் நிலை..” பிரதமர் மோடி பிரசாரம்

ஜுபிடரின் நிலவோ.. ஸ்ரீமுகி!

ரிஷபத்துக்கு பெயர்ச்சி அடைந்தார் குருபகவான்

SCROLL FOR NEXT