முகப்பு
தமிழ்நாடு

சேலம், நாமக்கல் உள்பட 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் சேலம் உள்பட 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளகதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:34 PM
Chance of heavy rain in 12 districts including Salem and Namakkal
பகிர்:

தமிழகத்தில் சேலம் உள்பட 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளகதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இதுகுறித்து வியாழக்கிழமை வானிலை ஆய்வுமையம் வெளியிட்ட அறிக்கையில், 

1.5 கிலோ மீட்டர் உயரம் வரை நிலவும் வளிமண்டல சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்கள் புதுவை, காரைக்கால் உள்பட ஒரு சில இடங்களில் மாலை அல்லது இரவு நேரங்களில் இடியுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 

சேலம், நாமக்கல், கரூர், கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, தஞ்சாபூர், புதுக்கோட்டை, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும். 

அடுத்த 48 மணி நேரத்தில் பெரும்பாலான மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் பரவலாக இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், 

வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன மழையும், சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சிராப்பள்ளி, திருப்பூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழையும் பெய்யக்கூடும். 

ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி வரும் அக்டோபர் 9-ம் தேதி, அந்தமான் ஒட்டியுள்ள பகுதியில் உருவாகக்கூடும். அதனை அடுத்த 24 மணி நேரத்தில் அந்தமான் மற்றும் அதனை ஒட்டியுள்ள மத்திய கிழக்கு வங்க கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலு பெறக்கூடும். 

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் நகரின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேகமூட்டத்துடன் காணப்படும். 

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச மழை பெய்த விவரம்

கடலூர் மாவட்டத்தில் குப்புநத்தம் 14 செ.மீ மழையும், காட்டுமன்னார்கோயில், மே.மாத்தூர் தலா 11 செ.மீ மழையும், விருதாச்சலம், பிளந்துறை 9செ.மீ மழையும், ஆலங்குடி 8 செ.மீ மழையும், கந்தர்வக்கோட்டை, சங்கராபுரம், நாமக்கல், மயிலாடுதுறை தலா 7 செ.மீ மழையும் பெய்துள்ளது. 
 

முழு கட்டுரையைப் படிக்க →