முகப்பு
தமிழ்நாடு

ஆத்ம நம்பி சுவாமிகள் ஞானோதய தினவிழா: மாணவர்களுக்கு காலணிகள்

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே குமாரசாமியூர் கிராமத்திலுள்ள, உப நிஷா ஆனந்த மந்திர் ஆசிரமத்தில், ஆத்ம நம்பி சுவாமிகளின் ஞானோதய தின விழா, சிறப்பு பஜனை மற்றும் ஏழை மாணவர்களுக்கு காலணி வழங்கும் விழா

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:34 PM
ஏழை மாணவர்களுக்கு காலணி வழங்கிய ஆத்ம நம்பி சுவாமிகள்
பகிர்:

வாழப்பாடி: சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே குமாரசாமியூர் கிராமத்திலுள்ள, உப நிஷா ஆனந்த மந்திர் ஆசிரமத்தில், ஆத்ம நம்பி சுவாமிகளின் ஞானோதய தின விழா, சிறப்பு பஜனை மற்றும் ஏழை மாணவர்களுக்கு காலணி வழங்கும் விழா நடைபெற்றது.

சேலம் மாவட்டம் வாழப்பாடி சேர்ந்தவர் ஆத்ம நம்பி சுவாமிகள்,  ஆன்மீகத்தின் மீது அதீத பற்று கொண்ட இவர், தன்னை அறிந்து ஞானோதயம் பெற்றார். வாழப்பாடி அருகே குமாரசாமியூர் கிராமத்தில்  ஆசிரமம் அமைத்து, ஆன்மீகப் பணியாற்றி வருகிறார்.


இவருக்கு உலகத்தில் பல்வேறு நாடுகளிலும் ஏராளமான பக்தர்கள் உள்ளனர். குமாரசாமியூர் உபநிஷ ஆனந்த மந்திர்  ஆசிரமத்தில்,  ஆத்ம நம்பி சுவாமிகளின் தன்னை அறிதல் தினவிழா புதன்கிழமை இரவு நடைபெற்றது.

இவ்விழாவையொட்டி, ஏழை எளிய மாணவர்களுக்கு, ஆத்ம நம்பி சுவாமிகள் இலவச காலணிகளை வழங்கினார். இதனைத் தொடர்ந்து நடைபெற்ற சிறப்பு பஜனையில் உள்ளூரைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

இணையவழியில் பல்வேறு நாடுகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். விழாவிற்கான ஏற்பாடுகளை, உபநிஷ ஆனந்த மந்திர் ஆசிரம விழா குழுவினர் செய்து இருந்தனர். 

முழு கட்டுரையைப் படிக்க →