போடி அருகே மூன்று நாள் தேனீ வளர்ப்பு பயிற்சி முகாம்
போடி அருகே சங்கராபுரம் கிராமத்தில் மூன்று நாள் தேனீ வளர்ப்பு பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை மாலை தொடங்கப்பட்டது.
போடி: போடி அருகே சங்கராபுரம் கிராமத்தில் மூன்று நாள் தேனீ வளர்ப்பு பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை மாலை தொடங்கப்பட்டது.
காமாட்சிபுரம் வேளாண் அறிவியல் மையம், தேனி நபார்டு வங்கி இணைந்து தேனீ வளர்ப்பு திறன் மேம்பாட்டு பயிற்சி மற்றும் கண்டுனர் நேரடி ஆய்வு குறித்த மூன்று நாள் பயிற்சி முகாம் போடி அருகே சங்கராபுரம் கிராமத்தில் நடைபெற்றது. வேளாண் அறிவியல் மையத் தலைவர் பச்சைமால் தலைமை வகித்தார்.
கோவை காரூண்யா வேளாண்மைக் கல்லூரி மாணவர்கள் பங்கேற்று தேனீ வளர்ப்பு குறித்து செய்முறை பயிற்சி பெற்றனர். மேலும், சங்கராபுரம் கிராமத்தில் பண்ணைத் தோட்டத்தில் தேனீ வளர்க்கும் விவசாயிகளிடம் விளக்கம் பெற்றனர். பயிற்சி முகாமில் கிராமப்புற பெண்கள் பலர் பங்கேற்று தேனீ வளர்ப்பு பயிற்சி பெற்றனர்.
மூன்று நாள் பயிற்சி முகாமில் வேளாண் வல்லுநர்கள், விவசாயிகள், மலைவாழ் பழங்குடியின மக்கள் பங்கேற்கின்றனர். ஏற்பாடுகளை வேளாண் அறிவியல் மைய நிர்வாகிகள் செய்திருந்தனர்.