முகப்பு
தமிழ்நாடு

கும்மிடிப்பூண்டியில் முடிதிருத்துவோர் சங்கத்தின் சார்பில் கடையடைப்பு ஆர்பாட்டம்

சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் முடி திருத்துவோர் தொழிலாளர் சங்கத்தினர் கடையடைப்பு போரட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:35 PM
கும்மிடிப்பூண்டியில் முடிதிருத்துவோர் சங்கத்தின் சார்பில் கடையடைப்பு ஆர்பாட்டம்
பகிர்:


கும்மிடிப்பூண்டி:  திண்டுக்கல் மாவட்டம் குரும்பட்டி கிராமத்தை சேர்ந்த 12 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் முடி திருத்துவோர் தொழிலாளர் சங்கத்தினர் கடையடைப்பு போரட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

திருவள்ளூர் மாவட்ட முடிதிருத்தும் தொழிலாளர் நல சங்கத்தின் மாவட்ட நிர்வாகிகள் ராஜேந்திரன், பாஸ்கர், ரமேஷ் உத்தரவின் பேரில் ஆரம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த முடிதிருத்தும் தொழிலாளர் நல சங்கத்தினர், அப்பகுதியில் கடையடைப்பு நடத்தி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட திண்டுக்கல் மாவட்டம் குரும்பாட்டி பகுதியைச் சேர்ந்த முடிதிருத்தும் தொழிலாளியின் 12 வயது மகளின் மறைவிற்கு அஞ்சலி செலுத்தி இந்த சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளி மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரினர்.

இந்த கடையடைப்பு மௌன அஞ்சலி ஆர்பாட்டத்திற்கு ஆரம்பாக்கம் பகுதி தலைவர் எம்.முருகன் தலைமை தாங்கினார். செயலாளர் எம்.சுந்தர், பொருளாளர் கே.வெங்கடேசன், துணை தலைவர் ஆர்.ராஜேஷ், துணை செயலாளர் இ.விஜய்  முன்னிலை வகித்தனர்.

 அதேபோல கும்மிடிப்பூண்டி, கவரப்பேட்டை, மாதர்பாக்கம், சுண்ணாம்புகுளம், ஈகுவார்பாளையம் உள்ளிட்ட 61 ஊராட்சிகளில் 530 முடிதிருத்தும் கடைகள் மூடப்பட்டு திண்டுக்கல் சிறுமி பாலியல் சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்க கோரினர்.

முழு கட்டுரையைப் படிக்க →