டி.ஜெ.எஸ். பொறியியல் கல்லூரியில் முதலாண்டு மாணவர்களுக்கு அறிமுக வழிகாட்டுதல் வகுப்பு
கும்மிடிப்பூண்டி அடுத்த பெருவாயல் டி.ஜெ.எஸ். பொறியியல் கல்லூரியில் முதலாண்டு மாணவர்களுக்கு அறிமுக வழிகாட்டுதல் வகுப்பு நடைபெற்றது.
கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அடுத்த பெருவாயல் டி.ஜெ.எஸ். பொறியியல் கல்லூரியில் முதலாண்டு மாணவர்களுக்கு அறிமுக வழிகாட்டுதல் வகுப்பு நடைபெற்றது.
நிகழ்விற்கு டி.ஜெ.எஸ். கல்வி குழும தலைவர் டி.ஜெ.கோவிந்தராஜன் தலைமை தாங்கி அறிமுக வழிகாட்டுதல் வகுப்பை துவக்கி வைத்தார்.
நிகழ்விற்கு கல்லூரி இயக்குனர் கபிலன், நிர்வாக அலுவலர் ஏழுமலை முன்னிலை வகித்தனர்.
இதில் கல்லூரி முதல்வர் டாக்டர் விஜயகுமார் முதலாண்டு மாணவர்களுக்கு பொறியியல் கல்வி குறித்தும், தேர்வுக்குத் தயாராகுதல், படிக்கும் காலத்திலேயே வேலைவாய்ப்பிற்கு தயார்படுத்திக்கொள்வது குறித்து விளக்கினார்.
தொடர்ந்து மாணவர்களுக்கு இணைய வழி வகுப்புகள் குறித்து விளக்கப்பட்டது. பின்னர், மாணவர்களுக்கு புத்தகம் உள்ளிட்ட கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது. பின்னர், மாணவர்களின் சந்தேகங்களுக்கு பேராசிரியர்கள் விளக்கம் அளித்தனர்.
வழிகாட்டுதல் வகுப்பின் முடிவில் முதலாண்டு துறை தலைவர் டாக்டர் எல்.சரிதா நன்றி கூறினார். நிகழ்விற்கான ஏற்பாடுகளை மாணவர் சேர்க்கை ஒருங்கிணைப்பாளர்கள் மன்னர்மன்னன், ஷாலினி, பிரகாஷ் முன்னின்று நடத்தினர்.