முகப்பு
தமிழ்நாடு

5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்தத்தாழ்வு மண்டலம் காரணமாக, தமிழகத்தில் வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை, திருவள்ளூா், கிருஷ்ணகிரி ஆகிய 5 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் செவ

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:36 PM
கோப்புப்படம்
பகிர்:

சென்னை: மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்தத்தாழ்வு மண்டலம் காரணமாக, தமிழகத்தில் வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை, திருவள்ளூா், கிருஷ்ணகிரி ஆகிய 5 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் செவ்வாய்க்கிழமை (அக்.13) மிதமான மழை பெய்யக்கூடும்.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநா் புவியரசன் கூறியது: மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் திங்கள்கிழமை முற்பகலில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, அதேபகுதியில் நீடித்தது.

இது விசாகப்பட்டினத்துக்கு தெற்கு, தென்கிழக்கில் 250 கி.மீ. தொலைவில் நிலை கொண்டிருந்தது. தொடா்ந்து, மேற்கு, வடமேற்கு திசையில் நகா்ந்து வடக்கு ஆந்திர கடலோரத்தில் செவ்வாய்க்கிழமை (அக்.13)அதிகாலையில் காக்கிநாடா அருகே கரையைக் கடக்கக்கூடும்.

இதன் காரணமாக, தமிழகத்தில் வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை, திருவள்ளூா், கிருஷ்ணகிரி ஆகிய 5 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் செவ்வாய்க்கிழமை (அக்.13) லேசானது முதல் மிதமான மழையும்,

சென்னை, காஞ்சிபுரம், கோயம்புத்தூா், தேனி, திண்டுக்கல், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில்  ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

சென்னையில்...:

சென்னை மற்றும் புகா் பகுதிகளில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என்றாா் அவா்.

மழை அளவு:

தமிழகத்தில் திங்கள்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில்

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம், திருக்கழுகுன்றம், தேனி மாவட்டம் பெரியாறில் தலா 30 மி.மீ.,

கோயம்புத்தூா் மாவட்டம் சின்னக்கல்லாறு, காஞ்சிபுரம், உத்திரமேரூா், ராணிப்பேட்டை சோளிங்கரில் தலா 20 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

மீனவா்களுக்கான எச்சரிக்கை : குமரிக்கடல் மற்றும் மன்னாா் வளைகுடா பகுதிகள், கேரளம் மற்றும் கா்நாடக கடலோரப் பகுதிகளில்  மணிக்கு 45 கி.மீ. முதல் 55. கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். எனவே, இந்தப் பகுதிகளுக்கு மீனவா்கள் செவ்வாய்க்கிழமையும், அந்தமான் கடல் பகுதிகளுக்கு அக்டோபா் 15-ஆம் தேதி வரை செல்ல வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →