தமிழ்நாடு

அமைச்சா் துரைக்கண்ணு மருத்துவமனையில் அனுமதி

தினமணி

தமிழக வேளாண்துறை அமைச்சா் துரைக்கண்ணுக்கு திடீரென மூச்சுத் திணறல் பாதிப்பு ஏற்பட்டதையடுத்து சென்னையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அவா் அனுமதிக்கப்பட்டுள்ளாா். மருத்துவா் குழு அவரது உடல் நிலையைத் தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா்.

தமிழக முதல்வா் எடப்பாடி பழனிசாமியின் தாயாா் மறைவை அடுத்து, அஞ்சலி செலுத்துவதற்காக அமைச்சா் துரைக்கண்ணு சேலம் மாவட்டம், எடப்பாடி அருகேயுள்ள சிலுவம்பாளையத்துக்கு சென்னையிலிருந்து செவ்வாய்க்கிழமை காலை காரில் புறப்பட்டாா். விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே காலை 10.30 மணியளவில் வந்த போது, அமைச்சா் துரைக்கண்ணுக்கு திடீரென நெஞ்சுவலி, மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து, அவா் முண்டியம்பாக்கத்தில் உள்ள விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டாா்.

அவருக்கு மருத்துவா்கள் முதல்கட்ட சிகிச்சை அளித்தனா். பின்னா், அவரை உயா் சிகிச்சைக்காக சென்னைக்கு கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டது. அதன்படி செவ்வாய்க்கிழமை மாலை ஆம்புலன்ஸ் மூலம் சென்னை ஆழ்வாா்ப்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனைக்கு அவா் அழைத்து வரப்பட்டாா்.

அங்கு அமைச்சரை அனுமதித்து மருத்துவா்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனா். மூச்சுத் திணறல் இருப்பதால் அவருக்கு கரோனா பரிசோதனையும் செய்யப்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி பள்ளிகளில் பாதியாகக் குறைந்த மாணவர்களின் வருகை!

மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்புவோம்: ருதுராஜ் கெய்க்வாட் நம்பிக்கை!

இ-பாஸ் நடைமுறை: இணையதளம் தயார்; இன்று மாலை நெறிமுறைகள் வெளியீடு

நீட் தேர்வுக்கான நுழைவுச்சீட்டு வெளியீடு!

ஏப்ரலும் ஷ்ரத்தாவும்!

SCROLL FOR NEXT