சென்னையில் திமுக பிரமுகருக்கு அரிவாள் வெட்டு
சென்னையில் திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் தனசேகரனை மர்ம நபர்கள் சிலர் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடினர்.
சென்னையில் திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் தனசேகரனை மர்ம நபர்கள் சிலர் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடினர்.
சென்னை கே.கே.நகர் திமுக அலுவலகத்தில் பணியில் இருந்த தனசேகரனை மர்ம நபர்கள் சிலர் உள்நுழைந்து அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிச் சென்றனர். இதனால் பலத்த காயமடைந்த அவர் அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அலுவலகத்தில் பணியாற்றும் பெண் ஊழியரும் காயமுற்ற நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தனசேகரன் மீதான முன் விரோதம் காரணமாக இந்த சம்பவம் நடந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. காவல்துறையினர் இதுகுறித்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.