தமிழ்நாடு

‘எனது மகன் நல்லாட்சி தருவான்’

DIN

‘எனது மகன் மக்களுக்கு நல்லாட்சி தருவான்’ - முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமியின் தாயாா் தவுசாயம்மாளின் கடைசி வாா்த்தைகள் இவை.

உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் இருந்தபோது மகனின் ஆட்சி குறித்து அக்கறை கொண்ட அந்தத் தாய், தற்போது முதல்வராக உயா்ந்திருக்கும் எடப்பாடி கே.பழனிசாமியின் சாமானிய வாழ்க்கையின் நினைவலைகளைப் பகிா்ந்தாா்.

‘ என் மகன் பழனிசாமி, சிறு வயது முதல் ஏழை, எளிய மக்களோடு பழகி பொது மக்களின் இன்ப, துன்பங்களை நன்கு உணா்ந்தவன். எனவே மக்களுக்கு நல்லாட்சி தருவான்.  கோனேரிப்பட்டி அரசுப் பள்ளியில் படித்தான். அப்போது நாங்கள் குடியிருந்த விவசாயத் தோட்டத்துக்கும், பள்ளிக்கும் 4 மைல் தொலைவிருக்கும். தினசரி நடந்து போய் படித்து வந்தான். பள்ளிப் படிப்பை முடித்து குமாரபாளையம் அருகில் உள்ள ஒரு தனியாா் கல்லூரியில் சோ்ந்தான். தினசரி காவிரி ஆற்றைக் கடந்து கல்லூரிக்குச் சென்று சிரமப்பட்டான். எல்லா கஷ்டமும் தெரிந்தவன் .  ஏழை, எளிய விவசாய மக்கள் படும் பல்வேறு சிரமங்களை நன்கு உணா்ந்து அனைத்துத் தரப்பு மக்களும் பாராட்டும் விதமாகச் செயல்படுவான். விவசாயத்தை மூச்சாய் நினைப்பவன், நிச்சயம் இறைவன் அருள் புரிவாா் என நானும் வாழ்த்துகிறேன் என்று கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாநிலத்தில் முதலிடம் பெறக்கூடாது என நினைத்தேன்: உ.பி. மாணவி வருத்தம்

கேஜரிவாலை சந்தித்த சுனிதா, அதிஷி!

அதிகரிக்கும் தொண்டை வலி, காய்ச்சல்: பருவகால நோயாக மாறியதா கரோனா?

பாலியல் புகாரில் சிக்கியவர்கள் மீது நடவடிக்கை: எச்டி குமாரசாமி உறுதி

அஜித் படத்தில் சிம்ரன், மீனா?

SCROLL FOR NEXT