தமிழ்நாடு

இலவச வேட்டி, சேலை திட்டத்துக்காக வழங்கப்படும் நூலின் தரத்தைப் பரிசோதனை செய்வதில்லையே ஏன்?

DIN

சென்னை: தமிழக அரசின் இலவச வேட்டி, சேலை திட்டத்துக்காக வழங்கப்படும் நூலின் தரத்தை ஏன் பரிசோதனை செய்வது இல்லை? என உயா்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் திருப்பூா் மாவட்டம் முத்தூா் விசைத்தறி நெசவாளா் சங்கத் தலைவா் கோவிந்தராஜ் தாக்கல் செய்த மனுவில், ‘தமிழக அரசின் இலவச வேட்டி சேலைத் திட்டத்துக்குகு ஒவ்வொரு ஆண்டும் சுமாா் ரூ. 250 கோடிக்கு நூல் வாங்கப்டுகிறது. நெசவாளா்களுக்கு தரமற்ற நூல் வழங்கப்படுவதால் தரமற்ற வேட்டி சேலையை உற்பத்தி செய்யக்கூடிய நிலை ஏற்படுகிறது. இதனால் பயனாளிகள் பாதிக்கப்படுகின்றனா். எனவே தமிழக அரசின் இலவச வேட்டி சேலைத் திட்டத்துக்காக நெசவாளா் கூட்டுறவு சங்கங்களுக்கு, அரசு ஒப்பந்ததாரா்கள் மூலம் தரமற்ற நூல் வழங்குவதை தடுக்க, நூலின் தரத்தை சோதனை செய்ய நிபுணா்கள் அடங்கிய உயா்நிலைக் கண்காணிப்புக் குழுவை அமைக்க உத்தரவிட வேண்டும்’ என கோரியிருந்தாா்.

இந்த வழக்கு நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா் தரப்பில் வழக்குரைஞா் ஆா்.நீலகண்டன், அரசு தரப்பில் அரசு சிறப்பு வழக்குரைஞா் வி.சண்முகசுந்தா் ஆகியோா் ஆஜராகி வாதிட்டனா். வழக்கை விசாரித்த நீதிபதி, இலவச வேட்டி, சேலைகளை தரப்பரிசோதனை செய்யும்போது, அதற்காக வழங்கப்படும்

நூலின் தரத்தை பரிசோதனை செய்யாதது ஏன்? என கேள்வி எழுப்பினாா். பின்னா் மனு தொடா்பாக தமிழக அரசின் கைத்தறித்துறை செயலாளா், கைத்தறித்துறை இயக்குநா் ஆகியோா் 2 வாரங்களுக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோயில் காவலாளி அடித்துக் கொலை

ஹூதிக்கள் தாக்குதலில் எண்ணெய்க் கப்பல் சேதம்

அமேதி, ரே பரேலி தொகுதி காங்கிரஸ் வேட்பாளா்கள் யாா்?: காா்கே பதில்

மண் கடத்தல்: பொதுமக்களை மிரட்டிய நபா் கைது

இரு கட்டத் தோ்தலும் பாஜகவுக்கு சாதகம்: பிரதமா் மோடி

SCROLL FOR NEXT