நடிகை குஷ்பு மீது வழக்குப் பதிவு செய்யக்கோரி மாற்றுத்திறனாளிகள் அமைப்பினர் புகார் 
தமிழ்நாடு

நடிகை குஷ்பு மீது வழக்குப் பதிவு செய்யக்கோரி மாற்றுத்திறனாளிகள் அமைப்பினர் புகார்

நடிகை குஷ்பு மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கக் கோரி மதுரை ஜெய்ஹிந்த்புரம் காவல் நிலையத்தில் மாற்றுத்திறனாளிகள் அமைப்பினர் வியாழக்கிழமை புகார் அளித்தனர்.

DIN

மதுரை: நடிகை குஷ்பு மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கக் கோரி மதுரை ஜெய்ஹிந்த்புரம் காவல் நிலையத்தில் மாற்றுத்திறனாளிகள் அமைப்பினர் வியாழக்கிழமை புகார் அளித்தனர்.

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய குஷ்பு அண்மையில் பாஜகவில் இணைந்தார்.  சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  காங்கிரஸ் கட்சி மூளை வளர்ச்சியில்லாத கட்சி என விமர்சனம் செய்தார்.

இதையடுத்து தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான மதுரை மாவட்ட தலைவர் நாகராஜன் தலைமையில் நடிகை குஷ்பு மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கக் கோரி மதுரை ஜெய்ஹிந்த்புரம் காவல் நிலையத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சத்தீஸ்கரில் நக்சல் எதிர்ப்பு நடவடிக்கை: வெடிபொருட்கள், ஜெலட்டின் குச்சிகள் மீட்பு

இந்தியா மீதான 25% கூடுதல் வரி நீக்கப்படும்? - அமெரிக்கா சூசகம்!

யு19 உலகக் கோப்பை: நியூசிலாந்தை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி!

ஹரியாணா: 50 வரை எண்ணத் தெரியாத 4 வயது மகளை அடித்துக்கொன்ற தந்தை கைது

ஜன நாயகன் வருமா? வராதா?

SCROLL FOR NEXT