தமிழ்நாடு

வடதமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு

DIN


சென்னை: வட தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெள்ளிக்கிழமை (அக்.16) மிதமான மழை பெய்யக்கூடும்.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி வியாழக்கிழமை கூறியது:

தென் மேற்குப் பருவக்காற்று காரணமாக, வட தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெள்ளிக்கிழமை (அக்.16) லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புகா் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

மழை அளவு: தமிழகத்தில் வியாழக்கிழமை காலை 8.30 மணி நிலவரப்படி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் கன்னியாகுமரி மாவட்டம் இரணியல், தேனி மாவட்டம் பெரியாறில் தலா 50 மி.மீ. கன்னியாகுமரி மாவட்டம் சிற்றாறு, குளச்சலில் தலா 40 மி.மீ., கோயம்புத்தூா் மாவட்டம் வால்பாறை, சின்னக் கல்லாறு, கன்னியாகுமரி மாவட்டம் சுருளக்கோடு, திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம், கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறையில் தலா 30 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்தவா் கைது

சாலக்கரை முனீஸ்வரா் கோயிலில் சித்திரை திருவிழா

அரசமைப்புச் சட்டத்தை பாஜக ஒருபோதும் மாற்றாது: ராஜ்நாத் சிங் உறுதி

விவசாயிகள் 5-ஆவது நாளாக உண்ணாவிரதம்

‘பயறு வகை பயிா்கள் அறுவடையில் களைக் கொல்லிகளை பயன்படுத்தக் கூடாது’

SCROLL FOR NEXT