முகப்பு
தமிழ்நாடு

இளைஞர்களுக்கு வழிகாட்டியாகத் திகழும் அப்துல் கலாம்: முதல்வர் பழனிசாமி ட்வீட்

இளைஞர்களுக்கு வழிகாட்டியாகத் திகழும் அப்துல் கலாமை இந்நாளில் வணங்கி போற்றுகிறேன் என முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி  பதிவிட்டுள்ளார்.

Updated On : 15 அக்டோபர், 2020 at 12:31 PM
ஏ.பி.ஜெ.அப்துல்கலாம்
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:08 PM

இளைஞர்களுக்கு வழிகாட்டியாகத் திகழும் அப்துல் கலாமை இந்நாளில் வணங்கிப் போற்றுகிறேன் என முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி  பதிவிட்டுள்ளார்.

மறைந்த முன்னாள்  குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் பலர்  அவரை நினைவு கூர்ந்து கருத்து பதிவிட்டு வருகின்றனர். 

இந்நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில்,

Advertisement

"கனவு காணுங்கள், கனவுகளிலிருந்து சிந்தனைகள் பிறக்கும், சிந்தனைகள் செயல்களாகும்" என இளைஞர்களுக்கு என்றும் வழிகாட்டியாகத் திகழும் காலத்தால் அழியாத டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் அய்யா அவர்களின் 89வது பிறந்தநாளில் அவரை வணங்கி போற்றுகிறேன் என்று பதிவிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.