தமிழ்நாடு

திருப்பூரில் 6 மாதங்களுக்குப் பிறகு விவசாயிகள் குறைதீர் கூட்டம்

DIN

திருப்பூர் மாவட்டத்தில் 6 மாதங்களுக்குப் பிறகு காணொலிக் காட்சி மூலமாக விவசாயிகள் குறைதீர் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாதந்தோறும் விவசாயிகளுக்கான குறைதீர் கூட்டம் நடைபெற்று வந்தது. இந்த நிலையில், கரோனா நோய்த் தொற்று பரவல் காரணமாக மார்ச் மாதம் முதல் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆகவே, விவசாயிகளுக்கான மாதாந்திர குறைதீர் கூட்டமும் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

இதனிடையே, விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் குறைதீர் கூட்டத்தை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தனர். இதையடுத்து, திருப்பூர் மாவட்ட ஆட்சியர் க.விஜயகார்த்திகேயன் தலைமையில் காணொலிக் காட்சி மூலமாக குறைதீர் கூட்டம் நடைபெற்றது. 

இதில், மாவட்டத்திலுள்ள 13 ஊராட்சி ஒன்றியங்களைச் சார்ந்த விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகள் காணொலி காட்சி மூலம் கலந்து கொண்டு தங்களது குறைகளைத் தெரிவித்தனர்.   

இந்தக் கூட்டத்தில், இணை இயக்குநர் (வேளாண்மை)  மனோகரன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) மகாதேவன், உதவி இயக்குநர் (தோட்டக்கலைத்துறை) பிரேமா, துணை ஆட்சியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங்கிரஸ் கட்சிக்கு மறதியா? ராஜ்நாத் சிங்

ருதுராஜ், டேரில் மிட்செல் அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 213 ரன்கள் இலக்கு!

வெள்ளியங்கிரி மலையேறிய பக்தர் உயிரிழப்பு

புன்னகைக்கும் சித்தி இத்னானி போட்டோஷூட்

யாா் பிரதமரானாலும், உலகின் 3-ஆவது பெரிய பொருளாதாரமாக இந்தியா மாறும்: சிதம்பரம் பேட்டி

SCROLL FOR NEXT