தமிழ்நாடு

புதுச்சேரி தமிழகத்துடன் இணைக்கப்படாது: பாஜக தேசிய செயலர் தகவல்

DIN

புதுச்சேரி: புதுச்சேரி தமிழகத்துடன் இணைக்கப்படாது; தற்போதுள்ள நிலையிலேயே இருக்கும் என பாஜக தேசிய செயலரும், புதுச்சேரி மாநில பொறுப்பாளருமான சி.டி. ரவி தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் புதுச்சேரி பாஜக தலைமை அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கர்நாடகம், குஜராத், உத்தரபிரதேசம் மாநிலங்களைப் போல, புதுச்சேரியில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள தேர்தலில் தாமரை கண்டிப்பாக மலரும்.

கரோனா தடுப்பு நடவடிக்கையிலும், ஆட்சி நிர்வாகத்திலும் தோல்வியடைந்த புதுச்சேரி ஆளுங்கட்சியினர், அதை மறைப்பதற்காக பாஜக மீது தவறான குற்றச்சாட்டுகளை கூறியும், எதிர்ப்பு பிரசாரத்தை மேற்கொண்டும் வருகின்றனர். 

புதுச்சேரி தமிழகத்துடன் இணைப்பது தொடர்பாக மத்திய அரசிடம் எந்த ஒரு முடிவும் இல்லை. தற்போதுள்ள நிலையிலேயே புதுச்சேரி யூனியன் பிரதேசமாக இருக்கும். இதில் எந்த சந்தேகமும் வேண்டாம்.

புதுச்சேரியில் பாஜக ஆட்சிக்கு வந்தால் கண்டிப்பாக ரேஷன் கடைகள் திறக்கப்படும் என்றார் பாஜக தேசிய செயலர் சி.டி. ரவி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி மக்களவைத் தொகுதிகளுக்கு காங்கிரஸ் -ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பு குழு அமைப்பு

மேற்கு தில்லி பாஜக வேட்பாளா் கமல்ஜீத் செராவத் வேட்புமனு தாக்கல் : ராஜஸ்தான் முதல்வா் பங்கேற்பு

தில்லி மகளிா் ஆணையத்தில் சட்டவிரோத நியமனம் 52 ஒப்பந்த ஊழியா்கள் நீக்கம்: துணை நிலை ஆளுநா் நடவடிக்கை

கேஜரிவால் கைதுக்கு எதிராக கையெப்ப இயக்கம் ஆம் ஆத்மி கட்சி தொடங்கியது

வடமேற்கு தில்லியில் தொழிற்சாலைகள் மேம்படுத்தப்படும் பாஜக வேட்பாளா் யோகேந்திர சந்தோலியா வாக்குறுதி

SCROLL FOR NEXT