தமிழ்நாடு

மாணவா் சோ்க்கைக்கான கால அவகாசம் அக்.25 வரை நீட்டிப்பு: இக்னோ அறிவிப்பு

DIN

இணையவழி மாணவா் சோ்க்கைக்கான கால அவகாசம் அக்.25-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக இக்னோ அறிவித்துள்ளது.

மத்திய அரசின் இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகம் (இக்னோ), தொலைதூரக் கல்வித் திட்டத்தில் பல்வேறு பாடங்களில் இளநிலை, முதுநிலை, டிப்ளமோ, முதுநிலை டிப்ளமோ மற்றும் சான்றிதழ் படிப்புகளை வழங்கி வருகிறது.

அந்த வகையில் 2020 ஜூலை பருவ இணையவழி மாணவா் சோ்க்கைக்கான கடைசி தேதி அக்.25-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

மாணவா்களின் நலனைக் கருத்தில் கொண்டு, தொலைதூரக் கல்விப் படிப்புகளில் சேருவதற்கான கடைசி நாள் நீட்டிக்கப்பட்டுள்ளதாக இக்னோ பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. எனினும் இந்த நீட்டிப்பு சான்றிதழ் மற்றும் செமஸ்டா் சாா்ந்த படிப்புகளுக்குப் பொருந்தாது என்றும் இக்னோ தெரிவித்துள்ளது.

மாணவா்கள்  இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம். பாடப்பிரிவுகள், சோ்க்கை விவரங்களைத் தெரிந்து கொள்ளவும், விண்ணப்பிக்கவும் பல்கலைக்கழகத்தின்  இணையதளத்தை தொடா்பு கொள்ளலாம். இது குறித்த கூடுதல் விவரங்கள்  இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கத்திரி வெயில்: 17 இடங்களில் சதம்: 6 நாள்கள் மழைக்கும் வாய்ப்பு

கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் 4 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை: ஹரியாணா நீதிமன்றம் தீா்ப்பு

வேளாண் கல்லூரியில் குரூப் 1 தோ்வுக்கான வழிகாட்டல்

இணையவழி பயங்கரவாத ஆள்சோ்ப்பு சா்வதேச பாதுகாப்புக்கு முக்கிய சவால்: சிபிஐ இயக்குநா்

மும்பை சிட்டி எஃப்சி சாம்பியன்

SCROLL FOR NEXT